தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.7.12

பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரை தாக்குவோம். தலிபான்கள் எச்சரிக்கை


"மியான்மருடன் உள்ள தொடர்பை பாகிஸ்தான் அரசு துண்டிக்கா விட்டால், அந்நாட்டு தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்துவோம்'' என, தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.மியான்மரில், வங்கதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ராகின் மாகாணத்தில், கடந்த மாதம் முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே கலவரம் மூண்டது.ராகின் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில், வங்கதேசத்திலிருந்து புலம் பெயர்ந்த, எட்டு லட்சம்
முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.இவர்கள், மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். சட்ட விரோதமாகப் குடியேரியவர்களுக்கு, குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது.இதற்கிடையே, முஸ்லிம்களின் குடிசைகளை தீ வைத்து கொளுத்தி விட்டதாகக் கூறி, கடந்த மாதம் பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில்,ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் பலியாகினர். இதையடுத்து, மவுங்தா பகுதியில், அவசர நிலை அறிவிக்கப்பட்டு, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

""மியான்மரில் முஸ்லிம்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதால் அந்நாட்டுடனான உறவை பாகிஸ்தான் அரசு துண்டித்துக் கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாது, அந்நாட்டு தூதரகத்தையும் மூட வேண்டும். இல்லாவிட்டால் பாகிஸ்தானில் உள்ள மியான்மர் நாட்டினரையும், அவர்களது உடமைகளையும் தாக்குவோம்'' என, தேரிக் - இ - தலிபான் அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.

0 கருத்துகள்: