லண்டனில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் பகுதிகளை இணைக்கும் கேபிள் கார் போக்குவரத்துக்காக அ மைக்கப்பட்ட கேபிள் அறுந்து விழுந்ததால், பயணி கள் பாதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஒலிம்பிக் போட்டியைக் காணவரு ம் ரசிகர்கள் தேம்ஸ் நதியின் மீது பயணித்த படி ல ண்டனின் அழகைப் பார்ப்பதற்காக 300 கோடி ரூபாய் செலவில் கேபிள் கார் போக்குவரத்து உருவாக்கப்ப ட்டுள்ளது. தெற்கு லண்
டனில் உள்ள க்ரீன்விச் பகுதியிலிருந்து கிழக்கு லண் டனில் உள்ள ராயல்டாக்ஸ் வரை கேபிள் கார் போக்குவரத்துக்கு ஏற்பாடு செ ய்யப்பட்டுள்ளது.
ஏராளமான சுற்றுலா பயணிகள இந்த காரில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், அதிகப்படியான வெயிலால் இந்த கேபிள் உருகி அறுந்து விட்டது. இதனால், லண்டனில் நேற்று 30 நிமிடங்களுக்கு இதன் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனினும் யாரும் காயமடையவில்லை. இந்தச் சம்பவத்தால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கேபிள் கார்களை இயக்கும் எமிரேட் ஏர்லைன்ஸ் நிறுவனத் தலைவர் டேனி பிரைஸ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக