தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.7.12

பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி அசாம் செல்கிறார்கள்?


அசாம் கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர தருண் கோகாய்க்கு   அவசர  உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந் தாலும் கூட கலவரம் கட்டுக்குள் உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டுநேரில் சென்று பார் வையிட பிரதமர் மன்மோகன் சிங், மற்றும் காங்கிர ஸ் தலைவர் சோனியா காந்தி இன்று அசாம் செல்ல விருப்பதாகத் டெல்லித் தகவல்கள் வெளிவந்துள்ள ன.கடந்த ஒருவாரமாக அசாமில் மலைவாழ் மக்க ளுக்கும், சிறுபான்மையினருக்கும் இடையே
கலவ ரம் கட்டுக்கடங்காமல் சென்றதை அடுத்து, அங்கு கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக உயர்வடைந்துள்ளது.  சுமார் 3 லட்சம் பழங்குடியினர் வீடிழந்து முகாமில் தங்கவைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

    இங்கும் ஒரு முகாம் தீக்கிரையாக்கப் பட்டு அந்த தீயிலும் ஒரு பெண் பலியானதாகத் தெரிகிறது. எனவே கலவரம் இன்னும் கட்டுக்குள் அடங்கவில்லை என்பதால் 500 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அசாமில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில்தான் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில முதல்வர் தருண் கோகாய்க்கு கலவரத்தை உடனே கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிகிறது.

தருண் கோகாய் கலவரத்தை அடக்குவதற்கு ஆரம்பத்திலேயே தவறிவிட்டதாக காங்கிரஸார் வெளிப்படையாக குற்றம் சுமத்த தொடங்கியுள்ளனர். 21 மாவட்டங்களில் மூன்றில் மாத்திரமே கலவரம் நடக்கிறது. ஏதோ அசாமே பற்றி எரிவதாக ஊடகங்கள் அதிகமாக புனைகின்றன என  தருன் கோகாயும் பதிலுக்கு ஊடகங்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

0 கருத்துகள்: