தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

28.7.12

தொலைக் காட்சி மற்றும் ஊடகங்கள் மொழிக் கொலை செய்வதை தடுப்போம் - தமிழர் பண்பாட்டு நடுவம்


தமிழர் பண்பாட்டு நடுவத்தின் அறிக்கை வருமாறு: தமிழை கொலை செய்வது தான் நாகரீகமா? தமிழக தொலைகாட்சிகள், பண்பலைவரிசைகள் தமிழை நித்தம் நித்தம் கொலை செய்கின்றன . தமிழ் மக்கள் பார்க்கும் , கேட்கும் நிகழ்சிகளில் தமிழ் தான் இல்லை. ஒரு வாக்கியம் முழுமையாக தமிழில் இல்லை. குழந்தைகள், இளையோர்களை பங்கெடுக்க செய்து அவர்களை ஆங்கிலம் பேசவைத்து, ஆங்கிலத்தின் இடை இடையே தமிழ் சொற்களை பேச வைக்கின்றன இந்த ஊடகங்கள் . இதை தமிழ் மொழியை நேசிக்கும் தமிழர்கள் இனியும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். மொழிக் கொலை என்பது இனக் கொலையே. 

அதை இனியும் தமிழர்கள் ஊக்குவிக்கக் கூடாது. இந்த ஊடகங்கள் நிகழ்சிகளை முழுவதும் தமிழ் மொழியிலே நடத்த வேண்டும் . முடியவில்லை என்றால் தமிழ் அறிஞர்களின் துணையோடு நடத்தட்டும். இனியும் நாம் மொழிக் கொலையை அனுமதியோம். இதை அனைவர்க்கும் பரப்புங்கள். எல்லோரும் இந்த பொறுப்பில்லா தொலைகாட்சிகள் மற்றும் பண்பலை வரிசைகளை கண்டிப்போம் . கேட்கவில்லை என்றால் இவைகளை புறக்கணிப்போம். முகநூல் போன்ற அயல்நாட்டு இணையங்கள் தமிழில் சேவைகளை வழங்குகின்றன . இதை தமிழ் மொழியில் தமிழர்கள் பயன்படுத்து கிறார்கள். அப்படி இருக்கும் போது தமிழக தொலைகாட்சிகள் ஏன் தமிழை பயன்படுத்துவது இல்லை ? இதை பயன்படுத்த செய்வது தமிழர்கள் நம் கையில் தான் உள்ளது. நாம் இந்த ஊடகங்களுக்கு சென்று நேரடியாக இது குறித்து அறிவுறுத்த உள்ளோம். 

வாழ்க தமிழ். 
தமிழர் பண்பாட்டு நடுவம்.

0 கருத்துகள்: