தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

30.7.12

ஒலிம்பிக்கில் பதக்கம் எடுக்காமலே புகழ் பெற்றது இந்திய அணி


இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிரு க்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி அதன் ஜனத்தொகைக்கேற்ப பாரிய சாதனைகளை படைக் காவிட்டாலும் முதலாவது அணி வகுப்பில் சரித்திர ம் படைத்துவிட்டது.ஆரம்ப அணி வகுப்பில் ஒவ் வொரு நாட்டு அணியும் தத்தமது தேசிய உடையுடன் அணிவகுத்து வந்தபோது ஆட்டுக்குள் மாடு நுழைந்த து போல பெண்மணி ஒருவர் இந்திய அணிக்குள் நு ழைந்து நடந்து வந்தார்.
இப்பெண்மணி சிவப்பு சட்டை அணிந்து லோங்ஸ் போட்டிருந்தார், இந்திய அணியில் இவர் முற்றிலும் மாறுபட்ட ஒருவராக இருந்தார்.
ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை இந்திய அணியில் இவர் இருந்துள்ளார்.
இந்தப் பெண்மணி யாரென்றே தெரியமல் இந்திய அணியும் தம்முடன் இணைத்து சென்றிருக்கிறது, அதுவும் பெண்மணியை முன்னணியில் நடத்தி செல்லும் கூத்து கண்களைப் பறித்தது.
இந்த மர்மப் பெண்மணி மதுரா கொனி என்ற இந்தியப் பெண் என்றும் பெங்களுரைச் சேர்ந்த இவர் இங்கிலாந்தில் படித்து வருகிறார்.
இப்பெண்மணி தன்னுடைய பேஸ்புக்கிலும் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இப்படியோர் செயல் நடந்தது தமது அணிக்கு பெருத்த அவமானம் என்றும் தாம் இதனால் மிகவும் கோபமடைந்துள்ளோம் என்றும் இதுபற்றிய விளக்கத்தை தரவேண்டுமெனவும் இந்திய அணியின் தொடர்பாளர் முரளிதரன் ராஜா கேட்டுள்ளார்.
ஒலிம்பிக் கமிட்டி தவறிழைத்தது ஒருபுறமிருக்க, தமது அணியில் சம்மந்தமில்லாத ஒருவர் நுழைந்து வருவதை கண்டு பிடிக்க முடியாமல் கொடியேற்றும் வரை இந்திய அணி ஆகாயம் பார்த்துக்கொண்டா இருந்தது..? என்ற கேள்வியும் பலரிடையே எழுந்துள்ளது.
இந்திய அணியைத் தவிர வேறொரு அணியில் இப்படியொரு தவறு நடக்க முடியுமா என்ற கோணத்திலும் பலர் சிந்திக்க வாய்ப்புள்ளது.
எப்படியோ 2012 ஒலிம்பிக்கில் இந்திய அணி தரிசனமான முறை ஒலிம்பிக் வரலாற்றில் இருந்து அழிக்க முடியாத கூத்தாக மாறி விட்டது.

0 கருத்துகள்: