கோவையில் நடந்த கண்காட்சியில் இந்தியாவின் அரை ரூபாய் (அனா) நாணயம் சுமார் ஒன்றரை லட் ச ரூபாய்க்கு மேல் விலை போயுள்ளது.கோவையி ல் வருடாவருடம் நடக்கும் பழம்பொருள் கண்காட் சியில் பழைய நாணயங்கள், பல்வேறு நாடுகளின் பழைய ரூபாய் நோட்டுக்கள், அரியவகைப் பொரு ட்கள் கண்காட்சிக்கு வைக்கப்படும். அப்படி இந்த ஆண்டு வைக்கப் பட்ட கண்காட்சியிலும்
அனைத் தும் இடம்பெற்றிருந்தன.
அப்போது பெயர் குறிப்பிட விரும்பாத நபர் ஒருவர், கண்காட்சியின் முடிவில் விடப்பட்ட ஏலத்தில் அரை அணா நாணயத்தை ஒன்றரை லட்ச ரூபாய் கொடுத்து வாங்கியதாகத் தெரிகிறது.அனைத் தும் இடம்பெற்றிருந்தன.
இந்த வருடம் பழைய நாணயங்கள் மட்டுமே 20 லட்ச ரூபாய்க்கு ஏலம் போனதாகவும், அதுவும் இந்த அரை அணா நாணயம்தான் அதிக விலைக்கு ஏலம் போனதாகவும் ஏலம் நடத்துபவர்கள் தெரிவித்துள்ளனர். ஏலம் போன அந்த அரை அணா நாணயத்தின் ஒரு புறம் விக்டோரியா மகாராணியின் தலையும், இன்னொரு புறம் 1880 ஆம் ஆண்டு நாணயம் அச்சிடப் பட்டதற்கான சான்றும் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் இந்த நாணயம் சுமார் 132 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கணிக்கபப்ட்டுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர் ஏலத்தில் எடுப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதே போன்று நிஜாம் காலத்து 11 கிராம் தங்அ நாணயத்தை ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் 1.50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். நேரு தலை பொறித்த 1964ம் ஆண்டு 50 பபைசா நிக்கல் நாயத்தை மும்பையை சேர்ந்த ஒருவர் 13,500 ரூபாய்க்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார்.
மும்பை, டெல்லி, கோவை, கொல்கத்தா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா என அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களின் நாணயம்-தபால் தலை சேகரிப்பாளர்களிடமிருந்து இந்த அரிய வகை பொக்கிஷங்கள் பார்வைக்கு வைக்கபப்ட்டுள்ளன.
மும்பையில் புகழ் பெற்ற ஓஸ்வால் ஆண்டிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த ஏலம் நடந்தது.
மும்பை, டெல்லி, கோவை, கொல்கத்தா, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா என அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களின் நாணயம்-தபால் தலை சேகரிப்பாளர்களிடமிருந்து இந்த அரிய வகை பொக்கிஷங்கள் பார்வைக்கு வைக்கபப்ட்டுள்ளன.
மும்பையில் புகழ் பெற்ற ஓஸ்வால் ஆண்டிக்ஸ் நிறுவனம் சார்பில் இந்த ஏலம் நடந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக