ரியாத்: கடந்த வெள்ளிக்கிழமை (27/07/2012) சவூதியின் கிழக்கு மாகாணத்தின் காதிஃப் பிராந்திய வீதிகளில் அணிவகுத்துச் சென்ற ஷியா கிளர்ச்சியாளர்கள் மீது சவூதி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு மேற்கொண்டதில் பலர் படுகாயமடைந்துள்ளனர்சவூதி உள்ளக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்," காதிஃப் பிராந்தியத்தின் பல பகுதிகளிலும் டயர்களை எரித்துக் குழப்பம் விளைவித்த கிளர்ச்சியாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் சவூதி அரசினால் 'தேடப்படுவோர்' பட்டியலில் இடம்பெற்றிருந்த முஹம்மத் அல் ஷாகுரியும் ஒருவர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாத ஆரம்பத்தில் கைதுசெய்யப்பட்ட ஷியா மதப் பிரிவுத் தலைவர்களுள் ஒருவரான நிம்ர் அல் நிம்ர் உள்ளிட்ட ஷீஆ பிரிவைச் சேர்ந்த கைதிகளை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரியே மேற்படி ஷியா பேரணியாளர்கள் வீதிகளில் இறங்கி அரச எதிர்ப்புக் கோஷங்களுடன் கிளர்ச்சிசெய்துள்ளனர்.
இம்மாத ஆரம்பத்தில் ஷீஆ கிளர்ச்சியாளர்கள் இருவர் சவூதி அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக