தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.7.12

சிரியாவுக்கு எதிரான ஐ.நா தீர்மானம் : சீனா, ரஷ்யா மீண்டும் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின


சிரியாவுக்கு எதிராக ஐ.நா சபை கொண்டுவரவிருந்த பொருளாதார தடை தீர்மானத்தை, ரஷ்யா மற்றும் சீ னா மீண்டும் தமது வீட்டோ அதிகாரத்தை பயன்படு த்தி நிராகரித்துள்ளன. சிரிய அதிபர் பசார் அல் அசாத் கனரக ஆயுதங்களை பயன்படுத்துவதையும், பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துவதையும் நிறுத்தாவிடி ல் பொருளாதார தடைகளை அங்கு அமல்படுத்துவ து தொடர்பில் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்ட து. இந்தியா உட்பட 11 நாடுகள்
இதற்கு ஆதரவளித் தன. எனினும் சீனா, ரஷ்யாஆகிய நாடுகள் தமது வீட்டோ அதிகாரத்தை மீண் டும் பயன்படுத்தி நிராகரித்தன. 

சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் என்னதான் எதிர்த்தாலும் தாம் தொடர்ந்து போராட போவதாக ஐ.நா அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாகிஸ்தான், தெ.ஆபிரிக்க நாடுகள் இவ்வாக்கெடுப்பை புறக்கணித்தன. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா ஆகியன் ஆதரவளித்தன. இதேவேளை சிரியாவில் 300 பேர் கொண்ட ஐ.நா கண்காணிப்பு குழு இன்னமும் 45 நாட்கள் அங்கு பணிபுரிவதற்கு குறித்த நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன.

சிரிய அதிபர் பசார் அல் அசாத்துக்கு எதிராக கடந்த 16 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் போராட்டங்களில் 10,000 ற்கு மேற்பட்டோர் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்றைய தாக்குதல்களில் மாத்திரம் 300க்கு மேற்பட்டோர் பலியாகிய மோசமான தாக்குதல்கள் நடைபெற்றிருந்தன. இதேவேளை தொடரும் கிளர்ச்சிப்படை தாக்குதல்களில் சிரியாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டிருந்ததால் பசார் அல் அசாத்தும் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. எனினும் நேற்று புதிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்வில் பசார் அல் அசாத் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் துருக்கி, ஈராக் எல்லைப்பகுதியை தாம் கைப்பற்றியிருப்பதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

0 கருத்துகள்: