தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.7.12

மனிதனை உயிருடன் தின்னும் மீனை கொண்டு வந்தால் ரூ.10,000 பரிசு. சீன அரசு அறிவிப்பு.


மனிதனை தின்னும் மீனை உயிருடனோ சாகடித்தோ பிடித்துக் கொண்டு வந்தால் பரிசு அளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.சீனாவின் குவாங்ஸி மாகாணத்தில் உள்ளது லியுஜியாங் ஆறு. இங்கு மனிதனை தின்னும் மீன்கள் (பிரானா) இருப்பது தெரிய வந்துளது. தென் அமெரிக்க கடல் பகுதியில் இந்த வகை மீன்கள் ஏராளமாக உள்ளன. மனிதனை தின்னும் இந்த வகை மீன்கள், லியுஜியாங் ஆற்றில் குளித்து கொண்டிருந்த 2 பேரை கடந்த வாரம் தாக்கி உள்ளது.இந்த மீன்கள், ஆற்றுக்குள் இறங்கும் மனிதர்களின் சதைகளை அப்படியே

பிய்த்து தின்னும். இதுகுறித்து குவாங்ஸி மாகாண அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக விசாரணை நடத்திய அதிகாரிகள், மனிதனை தின்னும் மீன்களை உயிருடனோ அல்லது சாகடித்தோ பிடித்து கொண்டு வந்தால் ரொக்க பரிசு அளிக்கும். ஒவ்வொரு மீனுக்கும் ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், லியுனியாங் ஆற்றில் 5 படகுகளில் அனுபவம் வாய்ந்த மீனவர்களை அனுப்பி உள்ளோம். மனிதனை தின்னும் மீன்களை அவர்கள் பிடித்து வருகின்றனர். இந்த வகை மீன்கள் இதற்கு முன் ஆற்றில் இருந்ததில்லை. மீன் மார்க்கெட்டில் இருந்து யாராவது கொண்டு வந்து ஆற்றில் விட்டார்களா என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்

0 கருத்துகள்: