இணையதள விளம்பர வர்த்தகத்தில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக, 26 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக சரிவை சந்தித்துள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் தங்கள் நிறுவனம் 492 மில்லியன் அமெரிக்க டாலர்கள்அல்லது 6 சதவீத இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த நிதியாண்டின் இதேகாலகட்டத்தில் 69 சதவீத ஏற்றம் பெற்றிருந்த தங்களது நிறுவனம், 26 ஆண்டுகளுக்கு பிறகு சரிவை சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக