சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத், ராணுவ அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் நேற்று கலந்து கொண்டார். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். போராட்டக்காரர்களை ஒடுக்க, ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.இந்நிலையில், டமாஸ்கஸ் நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு மைய தலைமையகத்தின் மீது, தற்கொலைப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியதில், ராணுவ அமைச்சர் தாவூத் ரஜிஹாவும், அதிபர் பஷர் அல் ஆசாத்தின் மைத்துனர் அசெப் ஷாகத்தும்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்துக்கு பிறகு, அதிபர் மாளிகையிலிருந்து பஷர் அல் ஆசாத் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது. ஆனால், அதிபர் மாளிகையில் நேற்று, புதிய ராணுவ அமைச்சர் பாத் அல் பீரிஜ் என்பவருக்கு, ஆசாத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம், அவர் அதிபர் மாளிகையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக