சவுதி அரேபியாவில் சந்தேக நபர்களை பின்தொடர்ந்து விரட்டிச்செல்லும் தமது அதிகாரிகளை தடுப்பதற்கு புதிய வழிமுறைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அந்நாட்டின் மத விவகாரங்களுக்கான காவல்துறைத் தலைவர் தெரிவித்துள்ளார்.அதில் அவர் கொல்லப்பட்டார், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளும் கடும் காயங்களுக்கு உள்ளாகினர்.அளவுக்கதிகமான சத்தத்துடன்
இசை ஒலிக்க, காரை செலுத்திய நபர் ஒருவரை காவல்துறையினர் விரட்டிச் சென்ற போது, அவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இவ்வாறான சம்பவங்களுக்கு சமயவிவகார காவல்துறைதான் பொறுப்புக் கூறவேண்டும் என்று குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்றன.
இதனையடுத்தே சமயவிவகார காவல்துறையைக் கட்டுப்படுத்த புதிய வழிமுறைகள் அறிமுகமாவதாக மத விவகாரங்களுக்கான காவல்துறைத் தலைவர் ஷேக் அப்துல் லத்தீஃப் அல் அஷேய்க் அறிவித்துள்ளார்.
சவுதியில் இந்தக் காவல்துறையினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை இந்தச் சம்பவத்துக்கு பின்னர் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக