லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது, பாதுகாப்பு பணிக்காக, 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்வதாக கூறியிருந்த தனியார் நிறுவனம், போதிய வீரர்களை சப்ளை செய்யாததால், குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.லண்டனில், வரும் 27ம் தேதி, ஒலிம்பிக் போட்டிகள் துவங்குகின்றன. இந்த போட்டியை குலைக்க, பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக புலனாய்வு துறை தெரிவித்துள்ளதால்,
பலத்த
பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பலத்த
ஒலிம்பிக் போட்டி நடக்கும் அரங்கங்களுக்கு அருகே உள்ள கட்டடங்கள் மீது, ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.போலீசார், ராணுவத்தினரை தவிர்த்து, தனியார் நிறுவனத்தை சேர்ந்த 10 ஆயிரம் வீரர்களை சப்ளை செய்ய, "ஜி4எஸ்' என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இந்த நிறுவனம், தற்போது திடீரென, "எங்களால் 4 ஆயிரம் வீரர்களை மட்டுமே சப்ளை செய்ய முடியும்' என, தெரிவித்துள்ளது. இதனால், இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்தாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிக்கான நாள் நெருங்கி விட்ட நிலையில், தற்போது, "ஜி4எஸ்' நிறுவனம், காலை வாரி விட்டதால், நிலைமையை சமாளிக்க ராணுவத்தினர் முன்வந்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக