தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.7.12

சிரியாவிற்குள் நுழைய இஸ்ரேல் கபடத் திட்டம்

ஈராக் – சிரியா எல்லைப் புறத்தில் உள்ள அப கமால் எல்லைப் புறத்தை போராளிகள் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அதை மீட்க சிரிய படைகள் கடும் தாக்கு தல்களை ஆரம்பித்துள்ளன.கடந்த புதன் பாதுகாப்பு அமைச்சர் கொல்லப்பட்ட பின்னர் யுத்தத்தை எவ் வாறு முன்னெடுக்கலாம் என்ற இரகசிய ஆலோச னைகளில் ஈடுபட்டுள்ள சிரிய படைகள் இதுவரை சரியான முடிவை வெளிக்காட்டவில்லை.சிரியா வின் தலைநகர் டமாஸ்கஸ் மிகவும் பெரிய நகர் சுமார் ஆறு மில்லியன்
மக்கள் குடியிருக்கும் பாரிய வட்டகை இதில் சிறிய பாக்கட் போன்ற பகுதியே போராளிகள் கைக்கு வந்துள்ளது, முழுமையான டமாஸ்கஸ்சையும் கட்டுப்பாட்டில் கொண்டுவர போராளிகளால் இயலாது என்கிறார் டென்மார்க் ஆய்வாளர் நாஸர் காடர்.
அதேவேளை லெபனானில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்புடன் தொடர்பு வைத்து இரசாயன ஆயுதங்களை பாவிக்கும் நிலை ஒன்று உருவாகலாம் என்று எச்சரித்த இஸ்ரேல் தான் களமிறங்க வேண்டிய பருவம் வந்துவிட்டதாக தெரிவிக்கிறது.
போராளிகள் என்ற போர்வையில் அல் காய்தா போராளிகளும் களத்தில் நிற்பதாக அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் துறையைச் சேர்ந்த சுசேனா ரைஸ் கூறும்போது ஐ.நாவிற்காக காத்திருக்காமல் அரபு நாடுகளுடன் இணைந்து அமெரிக்கா களமிறங்க வேண்டிய நேரம் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 6ம் திகதி நடைபெற இருப்பதால் ஒபாமா அமெரிக்கப் படைகளை இன்னொரு போரில் மாட்டுப்பட வைக்கமாட்டார் என்பதால் நிலமை இழுபட்டு செல்கிறது.
ஆனால் தடாலடியாக இஸ்ரேல் களமிறங்கி கூத்துக்குள் கோமாளி புகுந்த கதையாக அல்லது சிவ பூசையில் கரடி புகுந்த கதையாக எல்லாவற்றையும் நாசமாக்க வழியிருக்கிறது.
இஸ்ரேல் யாருக்காக சிரியாவிற்குள் இறங்கப்போகிறது என்பது முக்கிய கேள்வியாகும்.

0 கருத்துகள்: