கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மக்கள் முன் தோற்றமளித்த கியூபா நாட்டின் முன்னாள் சர்வாதிகாரி காஸ்ரோ நேற் று மறுபடியும் மக்கள் முன் காண்பிக்கப்பட்டார். இவர் எ ழுதிய ரைம் வோரியர் என்ற 1000 பக்கமுள்ள புத்தகத்தை வெளியீடு செய்வதற்காக மக்கள் முன் வந்துள்ளார். தற் போது 85 வயதை தொட்டுவிட்ட காஸ்ரோ குழந்தை முத ற்கொண்டு 1959 கியூபா புரட்சி ஊடாக இன்றுவரை தனது வாழ்வில் நடைபெற்ற
சம்பவங்களைஎழுதியுள்ளார். ஆ னால்சேகுவேராவின் மரணத்திற்கும் இவருக்கும் உள்ள தொடர்பு ஒரு மர்ம அலையாக பேசப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மைகளை அவர் எழுதியிருப்பார் என்று கருத இடமில்லை. சேகுவேராவுடைய மரணமும் இவருடைய எழுச்சியும் இணைத்து நோக்கப்பட வேண்டிய விடயமென பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இது இவ்விதமிருக்க உலக மக்களுடைய உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் கடமையை கியூபா செய்ய வேண்டும் என்று அவர் ஊடகங்களுக்கு முன் நின்று கூறியுள்ளார். அதே வேளை தனது நாட்டில் குவான்ரநோமா சிறையில் உள்ள கைதிகளை பார்க்க மறந்து தனது பிரதாபங்களை முன் வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது. வயதான இவருடைய வயிற்றில் பல தடவைகள் சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கடந்த 2006 ம் ஆண்டு தனது சகோதரன் ரவுள் காஸ்ரோவிடம் பதவியை வழங்கி ஒதுங்கியுள்ளார். ஒரு கம்யூனிஸ்டாக இருந்து மேலை நாடுகளின் அருளையும் பெற முடியும் என்பதை சாதித்து காட்டிய கம்யூனிஸ்ட் இவராகும். எல்லா கம்யூனிச தலைவர்களையும் சர்வாதிகாரிகளாக காட்டும் மேலைத்தேய பத்திரிகைகள் இவரை மட்டும் மகத்தான மனிதராக காட்டுவது எதற்காக என்ற மர்மம் தெரியாது சிவப்பு துண்டு போட்டு கம்யூனிஸ்டுக்கள் தமக்குள் ஆச்சரியப்படுவது ஆங்காங்கு நடப்பதுண்டு.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக