தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.2.12

யுவராஜ் சிங்கின் புற்றுநோய் சிகிச்சைக்கு மத்திய அரசு உதவும் : அஜய் மாகென்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள, யுவராஜ் சிங்கிற்கு தே வையான மருத்துவ உதவிகளுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க தயாராக இருப்பதாக மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.டுவிட்டரில் இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், யுவராஜ் சி ங் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அவ ரது ரசிகர்களை மாத்திரமல்லாது, என்னையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. அவர் அமெரிக்காவில் பெறப்போகும் சிகிச்சைக்கு உரிய
உதவிகளை அரசு சார்பில் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். அவர் விரைவில் பூரண நலம் பெற்று அணிக்காக விளையாட வேண்டும் என்றார்.
புற்றுநோய் கண்டறியப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க பாஸ்டன் புற்றுநோய் ஆய்வு மைய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் யுவராஜ் சிங், சித்தவைத்தியம் படியும் தனது சிகிச்சையை தொடர்கிறார். 
இப்புற்றுநோய் குணமாக்க கூடியது எனவும், எதிர்வரும் மே மாதம் முதல் அவர் மீண்டும் கிரிக்கெட்டில் நுழைய கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவரது தனிப்பட்ட டாக்டர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்: