பிரான்சிய புரட்சிக்கு பின் உலகம் கேட்கும் புகழ் மிக்க வாசகம்.. நேற்று முன் தினம் பிரான்சிய அதிபர் ஸார் கோஸி மறுபடியும் அழுத்தம் திருத்தமாக ஐ.நாவிற்கு எ திரான புரட்சிகரக் கருத்தை தெட்டத் தெளிவாக உலகி ன் முன் வைத்திருக்கிறார்.சென்ற வருடம்.கேணல் க டாபியை தூக்கிவீச முடியாதவாறு ரஸ்யா, சீனா, இரக சியமாக இந்தியா தடை போட்டபோது ஐ.நாவை தூக்கி குப்பையில் வீசு என்று கூறிவிட்டு, லிபியாவுக்கு எதிரா ன முதலாவது குண்டை வீசியது,
நேட்டோ அல்ல ஸார்கோஸிதான்.கடந்த ச னிக்கிழமை சிரியாவுக்கு எதிராக ஐ.நா கொண்டு வந்த பிரேரணையை ரஸ்யா, சீனா ஆகிய இரண்டு நாடுகளும் வீட்டோ அதிகாரைத்தைப் பாவித்து இடை நிறுத்திவிட்டன. இந்த நாசகார செயல் முதல் தடவையல்ல, இது இரண்டாவது தடவையாகும்.
முதல் தடவை இவர்கள் வீட்டோ பாவித்தபோது சிரிய அரசு 3000 பொது மக்களை கொன்றிருந்தது. இரண்டாவது தடவை வீட்டோ பாவித்தபோது 6000 மக்கள் கொல்லப்பட்டிருந்தனர்.
ஐ.நாவால் எதுவும் செய்ய முடியவில்லை…
ஐ.நா பிரேரணைக்கு எதிர்ப்புக் காட்ட நேற்று 217 பேரை கிரனைட் வீசிக் கொன்ற சிரிய நயவஞ்சக அரசு இந்த வரிகளை எழுதும்போது கோம்ஸ் நகரில் 15 பொது மக்களை கொன்று தள்ளுகிறது..
இப்படி…
சொந்த மக்களை கொலை செய்யும் அரசுகளை கட்டுப்படுத்த முடியாத ஐ.நாவை கெஞ்சிக் கொண்டிருப்பதைவிட, அந்த அமைப்பையே குப்பையில் வீசிவிட்டு நாம் களமிறங்க வேண்டும் என்று ஸார்கோஸி அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருப்பது பிரான்சிய புரட்சிக்கு பின் கேட்கும் புகழ் பெற்ற குரலாகும்.
அன்று..
பயங்கரவாத பட்டியலில் போடப்பட்ட இயக்கங்களை அழிப்பதற்கு உதவி செய்தது ஐ.நா..
இன்று..
பயங்கரவாத பட்டியலிடப்பட்ட இயங்கங்கள் இருந்த நாடுகளில் இருந்து நாசவேலை செய்த பயங்கரவாத அரசுகளை அழிப்பதற்கு உதவ முடியவில்லையானால் அந்தப் பக்கச்சார்பான அமைப்பு எதற்கு… ? ஸார்கோஸியின் கேள்வி அர்த்தமுள்ள கேள்வியல்லவா..?
அதனால்தான்..
சிரிய சர்வாதிகாரி பஸார் அல் ஆஸாட்டுக்கு சரியான பாடம் கற்பித்து, சொந்த மக்களுக்கு எதிராக இயங்கும் ஒரு நயவஞ்சக அரசை விரட்டியடிக்க தாம் தயார் என்று அவர் முழங்கியிருப்பது இந்த நூற்றாண்டின் புகழ்மிக்க குரலாக பதிவாகிறது..
அன்று லிபியாவுக்கு எதிராக ஸார்கோஸி களமிறங்கியபோது கேணல் கடாபி பதவி விலக வேண்டும் என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.
அது மட்டுமா..
இதுவரை அமெரிக்கா தலைமையில் இயங்கிய அணி இனி பிரான்ஸ் தலைமையில் அணி மாறுகிறது என்று அறிவித்திருந்தார்.
ஆக..
பயங்கரவாத பட்டியலில் இடம் பெற்றவர்களை அழிக்கும் பணிக்கு தலைமை தாங்கியது அமெரிக்கா..
பயங்கரவாத நாடுகளை அழிக்கும் போருக்கு தலைமை தாங்கப்போவது பிரான்ஸ் என்பது இதனுடைய கருத்தாகும்.
லிபியா அழிக்கப்பட்டுவிட்டது…
இனி சிரியா… ஈரான்… பாகிஸ்தான்… அப்பாலும் அப்பாலும்…
இடையில் ஒரு கேள்வி மூளையைச் சரடி ஓடுகிறது..
அப்படியானால் நேட்டோவின் பங்கு என்ன..?
பிரான்சின் தலைமையில் புதிய அணியா.. உடனடியாக எதிர்த்தது இந்த நேட்டோதான்.. அதுதான் லிபியாவில் குண்டு வீச்சுக்களை நடாத்த சற்று தாமதமாக அது களமிறங்கியது..
ஏன்..? நேட்டோவுக்கும், ஸார்க்கோஸிக்கும் என்ன முறுகல்.. ? ஏன் நேட்டோ தலைமையில் களமிறங்க மறுக்கிறார் ஸார்கோஸி… ?
நேட்டோவிலும் பல பயங்கரவாத அரசுகள் அங்கம் வகிக்கின்றன.. அவை நேட்டோவில் இருந்து புனிதம் பெற்றுவிட முடியாது..
உதாரணம்..
துருக்கி..
அதனால்தான் சென்ற மாதம் பிரான்சிய செனட் துருக்கியை போர்க்குற்றவாளி என்று அறிவித்தது. கடந்த 1915ம் ஆண்டு ஒரு மில்லியன் ஆர்மீனிய மக்களை மானிடப் படுகொலை செய்த நாடு துருக்கி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இப்படிப்பட்ட துருக்கி போன்ற நாடுகள் இருப்பதால் நேட்டோ புதிய உலகிற்கு தலைமை தாங்க முடியாது..
எப்படி நேட்டோ தேவையில்லையோ அப்படியே..
சிறீலங்கா, சீனா, ரஸ்யா, போன்ற நாடுகளின் போலி நலன்களை பேணும் ஐ.நாவும் தேவையில்லை..
ஸார்க்கோஸியின் குரலுக்கு கை தட்டவேண்டியவன் ஈழத் தமிழனல்லவா.. அவன் என்ன செய்கிறான்..?
இனி..
நேட்டோ என்பது அது கலைக்கப்படும்வரை அங்கத்துவ நாடுகளை கட்டிப்போடும் ஓர் அமைப்பு என்பதை வருங்காலம் வெளிப்படையாக உணர்த்தும்.
ஐ.நாவின் அடுத்த கட்ட பணி என்ன..?
அரசியல் தவிர்ந்த மற்றய விடயங்களை மட்டும் அது கவனிக்க வேண்டும்.. புவி வெப்பமடைதல், தொற்றுநோய், பட்டினி போன்ற வீட்டோ அதிகாரம் பாவிக்கப்படாத இடங்களில் மட்டும் அது தொழிற்பட வேண்டும்.
நிறைவாக..
ஸார்கோஸியின் பிரதான குற்றச்சாட்டுக்கு வருவோம்…
தனது நாட்டில் வாழும் ஓர் இனத்தை அந்த நாட்டின் அரசு நயவஞ்சகமாக கொலை செய்தால் அந்த அரசு உலக மன்றில் ஓர் அரசாக தொடர்ந்து நீடிக்க முடியாது..
சபாஷ்…!
சிறீலங்கா இந்த குற்றத்திற்குள் வரும் முதலாவது நாடு..
2009 ம் ஆண்டு மே..
புலிகளுக்கு சர்வதேச சமுதாயம் மரணம் என்ற ஒரு வழியை திறந்துவிட்டது..
2012 ல் உலக சமுதாயம் சிங்களத்திற்கு மரணமும் இல்லாமல் வாழ்வும் இல்லாமல் இரு வழிகளையும் அடைத்திருக்கிறது..
ஸார்கோஸி தலைமையில் புறப்பட்டுள்ள இந்தச் சூறாவளி சர்வாதிகாரக் காடுகளை எல்லாம் அடித்து சுடுகாடாக்கும்…. இதை லிபியாவுக்கு மேல் விழுந்த முதல் குண்டு சத்தம் கேட்க முன்னரே அலைகளில் தெட்டத் தெளிவாக எழுதியிருந்தோம்.
சரி.. இந்த அவலமான நிலையில் இந்தியா இலங்கைக்கு உதவுமா..?
இல்லை..
ஏன்..
சிரியாவுக்கு எதிரான வாக்கெடுப்பில் ரஸ்யாவையும், சீனாவையும் கைவிட்டு அந்தர் பல்டி அடித்துள்ளது இந்தியா..
சிறீலங்காவுக்கு எதிராக இனி அது ஆகாச பல்டி அடிக்கும்..
இனியும் இந்தியா சிறீலங்காவுக்கு ஆதரவளித்தால் தமிழ் நாட்டில் கலைஞரும், காங்கிரசும் வீட்டுக்கு போனது போல.. சோனியா அம்மையார் தோல்வியடைய நேரிடும்.
அன்று தீமையான பக்கத்தில் அரசியல் சுழன்றபோது பட்டம் விட்ட புலம் பெயர் தமிழினம் இன்று காற்று சரியான பக்கத்தில் காற்றடிக்கும்போது பட்டம் விடாமல் படுத்திருக்கலாமா..?
ஐ.நாவுக்கு வெளியால் செயற்பட விரும்பும் ஸார்கோஸிக்கு முதலாவது வாழ்த்துக் கடிதத்தை இன்றே அனுப்புவோம்..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக