அந்தமான் பழங்குடியின பெண்கள் தொடர்பான புதிய இ ரு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளதால் சர்ச்சை அ திகரித்துள்ளது. முன்னதாக, அந்தமான் - நிகோபார் தீவுக ளில் இதே போன்று பழங்குடியின பெண்களை சுற்றுலா பயணிகள் முன்னிலையில் நடனமாடவிட்டு காசு பார்க் க முனைந்த காவற்துறை அதிகாரி தொடர்பில் வீடியோ வெளியிடப்பட்டு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த து.இது தொடர்பில்
விசாரணையை முடுக்கிவிட்ட இந்திய மத்திய அரசு, குறித்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவித்திருந்தது.
விசாரணையை முடுக்கிவிட்ட இந்திய மத்திய அரசு, குறித்த நபர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறாது எனவும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இப்புதிய வீடியோக்கள் ஊடகங்களில் கசிந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வீடியோவில் இந்திய பொலீஸ் அதிகாரி முன்னிலையில் பெண்கள் அரை நிர்வாண கோலத்தில் நடனமாடும் காட்சியும், மற்றைய வீடியோவில், இராணுவ சீருடை அணிந்தவர்கள் முன்னிலையில் அவர்கள் நடனமாடும் காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இதை தொடர்ந்து பழங்குடியினத்தவர்களின் பாரம்பரியங்களை பார்க்கவேண்டிய காவற்துறையினரே, அவர்களை துஷ்பிரயோகம் செய்கிறார்களா எனும் அதிர்ச்சிக்குரிய கேள்வி சமூக ஆர்வலர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக