அல் காய்தா போராளிக்குழு தலைவர் ஒசாமா பின்லேடன் பதுங்கியிருந்த இடம் பற்றி தகவல் சொன்ன பாகிஸ்தான் டாக்டருக்கு, அமெரிக்க குடியுரிமை வழங்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக புகழ் பெற்ற இரட்டை கோபுரங்களை, அல் காய்தா போராளிகள் தகர்த்ததாக கூறுகின்றனர். அதற்கு காரணமான போராளிக்குழு தலைவர்
தலைவர் ஒசாமா பின்லேடனை அமெரிக்கா தேடி வந்தது. பாகிஸ்தான் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த பின்லேடனை, அமெரிக்க படையினர் கடந்த ஆண்டு மே மாதம் சுட்டுக் கொன்றனர். இந்நிலையில், அவர் பதுங்கியிருந்த இடத்தை காட்டி கொடுத்தது, பாகிஸ்தான் டாக்டர் ஷகீல் அப்ரிடி என்பவர்தான் என்பது தெரிய வந்தது.
இப்போது அவரை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்வது குறித்து பரிசீலித்து வருகிறது. ஆனால், டாக்டரை விடுவிக்க அமெரிக்கா தீவிர முயற்சித்து வருகிறது. மேலும், அமெரிக்க எம்.பி.க்கள் சிலர், டாக்டர் ஷகீலுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
இதுகுறித்து கலிபோர்னியா எம்.பி தனா ரோராபச்சர் கூறுகையில், டாக்டர் ஷகீலுக்கு தண்டனை வழங்கப்பட்டால், நிச்சயம் அவரை தூக்கிலிடுவார்கள். அவருக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்பட்டால், பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு நேரடி எச்சரிக்கை விடுப்பதாக அமையும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் டாக்டர் ஷகீல் உதவியுள்ளார். அவர் தேச துரோகம் எதுவும் செய்யவில்லை என்று கூறினார். ரோராபச்சரின் தீர்மானத்துக்கு பில்போசே, டெட்போ உள்பட பத்துக்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் ஆதரவு வழங்கி உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக