இந்தியாவின் பிரபல இரு சக்கர மோட்டார் வாகனமான ஹீரோ ஹோண்டா, இனி ஹீரோ மோட்டோகார்ப் என்றழைக்கப்படும். இதற்கான் ஒப்புதல் கடந்த வாரம் நடந்த நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பெறப்பட்டது.
சென்ற வருடம் டிசம்பர் மாதம் ஜப்பானின் ஹோன்டா நிறுவனத்துடன் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், இந்திய பங்குதாரர்கள், ஹோண்டாவின் பங்குகளை சுமார் 3840 கோடி ரூபாய்க்கு வாங்கி கொள்ள முடிவு செய்தது.அதன் தொடர்ச்சியாக, ஜூலை மாதத்திற்குள் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டதையடுத்து, புதிய பெயர் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்தியாவின் ஹீரோ குழுமம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இத்துடன், ஹோண்டா நிறுவனத்துடனான 26 ஆண்டுகால ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளது என்றும், ஹீரோ குழுமம் இனி ஹீரோ மோட்டோகார்ப் என்ற பெயரில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் வாகனங்களைச் சந்தைபடுத்தவும் முடிவு செய்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக