கோல்கட்டா: மேற்கு வங்கத்தில், இடதுசாரி கூட்டணி ஆட்சியில் இருந்த போது, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரையின்படி, வேலை வாய்ப்பில், இதர பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கான இடஒதுக்கீட்டை,10 சதவீதமாக அதிகரிக்க முடிவு செய்தது.
இதன் மூலம், மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் பயன்பெறுவர் என கூறப்பட்டது. ஆனால், அந்த மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால், அது அமலாகவில்லை. இந்நிலையில், முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் மசோதா, இன்னும் மூன்று மாதங்களில் கொண்டு வரப்படும் என, முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக