பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்கா தர வேண்டிய நிதியுதவி, பில்லியன் கணக்கில் பாக்கி இரு ப்பதால், இனி அந்நாட்டிடம் உதவி கேட்கப் போவதில் லை என, பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பயங்கர வாதத்திற்கு எதிரான போரில், 'கூட்டணி ஆதரவு நிதி' (சி.எஸ்.எப்.,) என்ற பெயரில், அமெரிக்கா மாதம்தோறு ம், பாகிஸ்தானுக்கு 100 முதல் 140 மில்லியன்
டாலர் அளவிற்கு, நிதியுதவி அளித்து வருகிறது.
டாலர் அளவிற்கு, நிதியுதவி அளித்து வருகிறது.
அதாவது, மாதம்தோறும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் பாக்., செலவு செய்துவிட்டு, அதற்கான கணக்கு வழக்குகளை, அமெரிக்காவிடம் அளித்து பணம் வாங்கிக் கொள்ள வேண்டும். இந்தாண்டின் முதல் ஐந்து மாதங்களில் மட்டும், பாக்., ராணுவம் 187 பில்லியன் டாலர் செலவழித்துள்ளது. இது, பாக்., ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட ஆண்டு பட்ஜெட்டான, 495.2 பில்லியன் டாலரில், 38 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஓராண்டாகவே, பாகிஸ்தான் அளிக்கும் கணக்கு வழக்குகள் மீது, பல்வேறு காரணங்கள் கூறி, நிதியுதவியை பாக்கி வைத்து வருகிறது அமெரிக்கா. அவ்வகையில், பாகிஸ்தானின் கணக்கில், 35 முதல் 40 சதவீதத்தை, அமெரிக்கா நிராகரித்து விட்டது. இது, அபோதாபாத்தில் ஒசாமா பின்லாடன் கொல்லப்படுவதற்கு முன் நடந்தது.
கடந்தாண்டு டிசம்பர் வரை, பாக்., கேட்ட நிதியான 12 பில்லியன் டாலருக்குப் பதிலாக, அமெரிக்கா, 8.6 பில்லியன் டாலர் நிதியுதவி அளித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் வரையிலான நிதியுதவி, கடந்தாண்டு டிசம்பரில் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டது. அதற்குப் பின், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா தர வேண்டிய பாக்கி மட்டும், 900 மில்லியன் டாலரில் இருந்து, 2.5 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 600 மில்லியன் டாலர் பாக்கி உள்ளது.
இதையடுத்து, இனி பயங்கரவாதத்திற்கு எதிரான போரில், அமெரிக்காவின் நிதியுதவியை கேட்கப் போவதில்லை என, பாக்., முடிவு செய்துள்ளது. அதேநேரம், பாக்கி தொகையை அமெரிக்காவிடம் கேட்பதா அல்லது கணக்கில் கழித்து விடுவதா என, ஆலோசித்து வருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக