தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.11

அணு உலைகள் சாதக பாதகங்கள் ஒரு அலசல் - பாகம் 1

 தற்போது நம் கூடங்குளம் மட்டுமல்ல ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் உக்ரைனிலும் அதிகமாக பேசப்படும் ஒரு விஷயம் அணுஉலை எதிர்ப்பு. சிலர் அணுஉலைகளை ஆதரித்தும் சி லர் எதிர்த்து எழுதியும் பேசியும் வரும் இந்த வேளையில் என் சிற்றறிவிற்கு எட்டிய சில விசயங்களை பகிர்ந்துகொ ள்ள ஆசைப்படுகிறேன். இந்த பதிவானது எனது தனிப்பட்ட கருத்துகள், இதில் குறிப்பிடப்பட்ட விசயங்கள் சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன. முடிந்தவரை அனைவருக்கும்

புரியும்படி எழுதியுள்ளேன். இது யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ எழுதப்பட்டதல்ல.



              உலக அணு ஆராய்ச்சியில் இந்தியா பழம் பெருமை வாய்ந்தது என்பதில் நாம் பெருமை கொள்ளலாம். 1944 ஆம் ஆண்டு Dr ஹோமி ஜகாங்கீர் பாபா என்ற அணு விஞ்ஞானியால் இந்தியாவில் அணு விஞ்ஞான ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. 1970 ஆம் ஆண்டு உலகில் உள்ள 82 அணுஉலைகளில் 2 அணுஉலைகள் இந்தியாவில் இருந்தது.


Country
No. of Reactors
MW(e)
Belgium
1
11
Canada
2
238
France
8
1696
Germany
8
992
India
2
300
Italy
3
563
Japan
5
1272
Netherlands
1
55
Russia
5
786
Spain
1
142
Sweden
1
10
Switzerland
1
365
UK
27
3524
USA
17
6347

            நம் நாட்டின் அணு ஆராய்ச்சியின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். மும்பையில் டாட்டா அணு ஆராய்ச்சி மையம் டிசம்பர் 19 , 1945 இல் ஆரம்பிக்கப்பட்டது. பின் ஆகஸ்ட் 10  ஆம் நாளில் 1948 இல் இந்திய அணு ஆராய்ச்சி குழுவம் நிறுவப்பட்டது. இந்தியாவின் முதல் சோதனை அணு உலை மகாராஷ்டிரா மாநிலத்தில் ட்ரோம்பையில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உள்ள அப்சரா அணு உலை. இது 1956 ஆம் ஆண்டு ஆகஸ்டு 4 ஆம் தேதி முதல் இயக்கத்தை தொடங்கியது. பிறகு ஜூலை 10 ஆம் நாள் 1960 ஆண்டு  சிரஸ் (CIRUS ) என்கிற சோதனை அணுவுலை இயக்கத்தை துவங்கியது.
            பிறகு அமெரிக்க தொழில் நுட்பத்துடன்  தாராப்பூரில் வணிகரீதியான அணுஉலையை  நிறுவி 1969 ஆம் ஆண்டு உற்பத்தியை துவங்கியது. அடுத்து 1973 ஆம் ஆண்டு ராஜஸ்த்தானில் உள்ள ராவட்பாட்டாவில் கனடா நாட்டு தொழில் நுட்பத்துடன் முதல் அணுஉலை உற்பத்தியை துவங்கியது ஆனால் இரண்டாவது அணுஉலை முடியும் முன் இந்தியா 1974 ஆம் ஆண்டு தன் முதல் அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியதால் உலகில் அணு ஆராய்ச்சியில் முன்னணி நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கான அணு ஆராச்சிக்கான உதவிகள் அனைத்தையும் நிறுத்திவிட்டன. இதன் பிறகு இந்தியாவின் அணு ஆற்றல் நின்றுவிடும் என்று நினைத்த அனைத்து நாடுகளையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது தடைக்குப் பிறகு நடந்த நிகழ்வுகள். இந்தியாவின் அணு விஞ்ஞானிகள் ராஜஸ்தான் இரண்டாவது அனுவுலையை இயக்கி எங்களாலும்  முடியும் என்று நிருபித்தார்கள். அதன் பின் இந்தியாவின் சொந்த தொழில்நுட்பத்தில் உருவாகிய முதல் அணுவுலை என்ற பெருமை கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணு மின்நிலையத்திற்கு உரியதானது. அதன் பிறகு தொடர்ச்சியாக நரோரா, கக்ரப்பாரா மற்றும் கைகா என இந்திய தொழில் நுட்பத்தில் அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது 20 அணுமின்நிலையங்கள் இயக்கத்தில் உள்ளன. மேலும் 6 அணு மின் நிலையங்கள் கட்டுமானத்தில் உள்ளது.
              நம் நாட்டிற்கு அணு மின்நிலையங்கள் தேவையா? அடுத்த பாகத்தில்

இதோ சில கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு.
                     எந்த ஒரு புது திட்டங்களும் ஆரம்பிக்கும் போது அதிக எதிர்ப்பு இருக்கும் பிறகு ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அணு உலைகள் விசயத்தில் நிலைமை தலைகீழாக உள்ளதே அது ஏன்?.
  1.  முதலில் நம் அறிவை உலகிற்க்கு பறைசாற்ற பெருமை மயக்கத்தில் ஏற்றுக்கொண்டு இப்போது தெளிவடைந்து விட்டோமா? 
  2. அப்போது நமக்கு போதுமான அறிவியல் அறிவு இல்லாமல் இருந்து இப்போது அறிவியல் அறிவு வளர்ந்துவிட்ட காரணத்தாலா?.
  3. அப்போது உள்ள ஆட்சியாளர்கள் மீது இருந்த நம்பிக்கை இப்போது உள்ள ஆட்சியாளர்களிடம் இல்லையா? 
  4. இதற்கு எல்லாவற்றிற்கும் மேலாக எதை எடுத்தாலும் எதிர்க்க வேண்டும் என்கிற மனோபாவமா?. 
                   இவற்றிர்க்கெல்லாம் பதில்களை கடைசியில் விவாதிப்போம்.

0 கருத்துகள்: