தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

23.12.11

எகிப்தில் போராடும் பெண்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றனர்: அமெரிக்கா கண்டனம்

கெய்ரோ, டிச. 23-  எகிப்தில் மக்கள் புரட்சியால் அதிபர் ஹோசினி முபாரக் ஆட்சி முடிவுக்கு வந்து ராணுவத்தின் கையில் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மக் களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரத் தை அளிக்குமாறு மக்கள் கடந்த 5 நாட்களாக போராடி வ ருகின்றனர். தலைநகர் கெய்ரோவில் உள்ள தக்ரிர் சதுக் கத்தில் நடந்த போராட்டத்தின்போது ராணுவம் வன்மு
றை வெறியாட்டம் நடத்தியது.அப்போது, போராட்டத்தில் பங்கேற்ற ஒரு இளம்பெண்ணை ராணுவ வீரர்கள் தரையில் தள்ளி கையைப் பிடித்து இழுத்துச் சென்றனர். மேலும், அந்த பெண்ணின் மேல் சட்டையை உருவி, வயிற்றில் மிதித்தனர். இந்த காட்சி வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்யப்பட்டு இணையதளத்தில் வெளியாகின. இதைத்தொடர்ந்து, எகிப்தில் கலவரம் மூண்டுள்ளது. ஏராளமான பெண்கள் நேற்றும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். எகிப்து ராணுவத்தின் இந்த செயலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன், "எகிப்து போராட்டத்தில் பங்கேற்கும் பெண்கள் சூழப்பட்டு நடுங்க வைக்கும் கொடுமையில் ஈடுபடுகின்றனர். பெண் பத்திரிகையாளர்களும் மானபங்கம் செய்யப்படுகின்றனர். இப்போது, உச்சகட்டமாக இளம்பெண் ஒருவர் நடு ரோட்டில் உள்ளாடை தெரியுமாறு இழுத்துச் செல்லப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. எகிப்தில் போராடும் பெண்கள் மரியாதை குறைவாக நடத்தப்படுகின்றனர்" என்றார்.

0 கருத்துகள்: