இஸ்லாமாபாத், டிச. 23- அமெரிக்க ராணுவத்துடன் பா கிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு தொடர்பு இருப்பதாக எழு ந்த சர்ச்சையால் அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூ தர் மாற்றப்பட்டார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 6-ந் தேதி அன்று துபாய்க்கு சர்தாரி திடீர் என புறப்பட்டார். இதனால், அவர் பதவி விலகப்போவதாகவும், அவருக் கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும்
தகவல்கள் வெளியா கின.அங்கிருந்து லண்டன் செல்லப்போவதாகவும் கூறப்பட்டது.
தகவல்கள் வெளியா கின.அங்கிருந்து லண்டன் செல்லப்போவதாகவும் கூறப்பட்டது.
ஆனால், துபாயில் இருந்து பாகிஸ்தானுக்கு நேற்று முன்தினம் அவர் திரும்பினார். இந்த நிலையில், சர்தாரியை பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராசா கிலானி நேற்று சந்தித்து பேசினார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த சந்திப்பின்போது, பாகிஸ்தானில் சமீபத்தில் எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் அது தொடர்பான விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
அப்போது, பாகிஸ்தான் ஆளும் கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான அவாமி தேசிய கட்சியின் தலைவர் அஸ்பன்டியார் வாலி கான், சிந்து மாகாண முதல்-மந்திரி குயிம் அலி ஷா ஆகியோரும் உடன் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக