கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் இந்திய இறையாண்மைக்குபாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகும் விடயங்கள் இருப்பதால்,சமூக வலைத்தளங்கள், வீடியோ, புகைப்படம், வலைப்பதிவு , இடுகை உட்பட இணையத்தை பயன்படுத்தி ஒருவர் வெளியிடும் அனைத்து தகவல்களையும் மனிதர்களை கொண்டு கண்காணித்து அவற்றை தணிக்கை செய்த பின்னரே வெளியிட வேண்டுமென டெல்லியில்
உள்ள மத்திய தொலை
தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கோரியுள்ளதாக தெரியவருகின்றது.சமூக வலைத்தளங்களின் இந்திய பிரதிநிதிகளை அவர் சந்தித்த போதே இவ்வாறு கோரிக்கை விடுத்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்தியாவிலிருந்து மனிதர்களால் தணிக்கை செய்ய முடியாதளவு ஏராளமான தகவல்கள் இணையத்தில் வெளியிடப்படுவதால் கபில்சிபிலின் ஆலோசனைக்கு சாத்தியமில்லை என சமூக வலைத்தள பிரதிநிதிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
யூடியூப்பில் மாத்திரம் ஒரு நிமிடத்திற்கு 48 மணிநேரத்திற்கு ஓடக்கூடிய வீடியோக்கள் வலையேற்றப்படுகின்றன.
ஒருநாளைக்கு 250 மில்லியன் டுவிட்டுக்கள் உருவாகின்றன என்பது மத்திய அமைச்சருக்கு தெரியாமல் போயிருக்கலாம் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக