முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் குமுளியில் உள்ள தமிழர்கள் கடைகள் உடைக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கம்பத்தில் உள்ள மலையாளிகளின் கடைகளை தமிழர்கள் அடித்து நொறுக்கினர் விஸ்வரூபம் எடுத்து வரும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக இரு மாநில எல்லையில் வன்முறை ஏற்பட்டு வருகிறது. நேற்றிரவு குமுளியில்
உள்ள தமிழர்களின் கடைகளை மலையாளிகள் அடித்து நொறுக்கினர். இதில் ஓட்டல்கள், டீக்கடைகள், பல்பொருள் அங்காடிகள் அடங்கும். அப்போது கடைகளில் இருந்த தமிழர்களையும் அந்த கும்பல் தாக்கியது.இந்த வன்முறையால் குமுளியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மலையாளிகளின் இந்த திடீர் வன்முறையால் குமுளி, சுற்றுப்புற பகுதிகளில் வசித்து வரும் தமிழர்கள் பீதி அடைந்துள்ளனர்.
இதனிடையே, குமுளியில் தமிழர்களின் கடைகள் தாக்கப்பட்டதை அறிந்ததும் தேனி மாவட்டம் கம்பத்தில் நேற்றிரவே மலையாளிகளின் கடைகள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்தினர். கம்பம் நகரில் காந்திசிலை, மெயின்ரோடு, அரசமரம் சிக்னல் பகுதிகளில் ரோடுகளில் நின்றிருந்த நூற்றுக்கணக்கானவர்கள் மலையாளிகளின் ஓட்டல்கள், கடைகளை அடித்து நொறுக்கினர்.
முத்தூட் நிதி நிறுவனமும் அடித்து நொறுக்கப்பட்டது. ஏற்கனவே தமிழக – கேரள எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் கம்பம் நகரில் உள்ள கேரளத்தை சேர்ந்த கடை உரிமையாளர்கள் கடைகளை இரவோடு இரவாக பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.
மலையாளிகளின் இந்த வன்முறை காரணமாக தமிழக – கேரள எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக