தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

7.12.11

பூமி போலவே இன்னொரு கிரகம் கெப்லர் கண்டு பிடித்தது

அண்ட வெளியில் சரியாக பூமி போலவே சஞ்சாரித்துக் கொண்டிருக்கும் சகோதார கிரகம் ஒன்றை டேனிஸ் விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். நேற்று நாஸா இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. 2009 மார்ச் ஏவப்பட்டு விண்கலம் கப்லரின் துணையுடன் இக்கிரகம் கண்டு பிடிக்கப்பட்டது. பூமி போலவே இருக்கும் இதற்கு கெப்லர் 22 பீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனது தலைமைச் சூரியனுக்கு வெகு தொலைவில் இது சுற்றுகிறது.
புவியைவிட 2.4 மடங்கு பெரிதாக இருக்கிறது. இங்கிருந்து 600 ஒளி வருடங்கள் தொலைவில் உள்ளது. இது தனது சூரியனை சுற்றிவர 290 நாட்களை எடுக்கிறது. சுற்றுகை வேகம் குறைவாக உள்ளது, தரை மேல் வெப்பம் புவி போலவே உள்ளது. ஆகவேதான் இதில் புவிபோல உயிரினங்கள் இருப்பதற்கு வாய்ப்புண்டா என்ற ஆய்வுகளை டென்மார்க் வானிலைப் பேராசிரியர் கன்ஸ் கியோல்ட் தலைமையிலான குழுவினர் முடுக்கி விட்டுள்ளனர். இந்தக் கிரகத்தை நோக்கி றேடியோ சமிக்ஞைகளை உள்வாங்கும் கருவிகள் அனைத்தும் திருப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுவரை தாம் எதிர் பார்க்கும் சிக்னல்கள் கிடைக்கவில்லை இருப்பினும் நம்பிக்கையுடன் அதற்காக காத்திருப்பதாக தெரிவித்தனர். ஆனால் இந்தக் கிரகத்தில் தண்ணீர் காணப்படவில்லை எனவே புவியில் உள்ளதைப்போன்ற சிவிலைஸ் பண்ணப்பட்ட உயிரினங்கள் இருக்குமா என்பது கேள்விக்குறி. தினசரி புவியை நோக்கி தொலைவில் உள்ள மாற்றுக் கிரகங்களில் இருந்து றேடியோ சமிக்ஞைகள் வந்தபடி உள்ளமை குறிப்பிடத்தக்கது. கெப்லர் 22 பீ என்ன சொல்லப்போகிறது பொறுத்திருந்து பார்க்க வேண்டும். டென்மார்க் ஓகூஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏழு விஞ்ஞானிகள் இந்த வேலைத்திட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள். இதுவரை 2326 கிரகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் 207 புவியின் அளவு கொண்டது, 680 புவியை விட பெரியவை, 1.181 நெப்டியுன் அளவு பருமன் உடையவை, 203 யுப்பிற்றர் அளவுடையவை, 55 யுப்பிற்றரைவிட பெரியவை. இப்படி 150.000 கிரகங்களை குறிவைத்து, அங்கு மனிதர்கள் போல உயிரினம் உண்டா என்று நாஸா தேடி வருகிறது.

0 கருத்துகள்: