விக்கிலீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் மீதுள்ள பாலியல் வழக்கு தொடர்பாக அவரை நாடு கடத்த லண்டன் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டனிலிருந்து ஸ்வீடனுக்கு நாடு கடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் மாதம் 2ம் திகதி தள்ளுபடி செய்தது.மேலும் இந்த தீர்ப்பை எதிர்த்து அசாஞ்சே உச்ச நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கலாம் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அசாஞ்ச் அனுமதி கோரியிருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதியளித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அவரது நிறுவனமான விக்கிலீக்ஸ்-இல் பணிபுரியும் இரு பெண்களை பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு அசாஞ்ச் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக