குலியாகேன், நவ. 25- மெக்சிகோ நாட்டில், இரண்டு வாகனங்களில், 17 பேர் எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர்.மெக்சிகோ நாட்டின் சினலோவா பகுதி, சர்வதேச போதை கடத்தல் கும்பல்களின் சொர்க்கமாக உள்ளது. இங்கிருந்து, அண்டை நாடான அமெரிக்காவுக்கு, போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன. கடந்த 2006ம் ஆண்டு முதல், போதை
கடத்தல் கும்பல்களுக்கிடையே நடக்கும் சண்டையில், இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
கடத்தல் கும்பல்களுக்கிடையே நடக்கும் சண்டையில், இதுவரை 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், அன்டோனியோ ரொசேல்ஸ் பகுதியில், இரண்டு வாகனங்கள் எரிந்த நிலையில் கிடந்தன. அந்த வாகனங்களில், 17 பேர் கருகிக் கிடந்தனர். இவர்களில் சிலரது கைகள் விலங்கிடப்பட்டிருந்தன. இந்த சம்பவங்கள், போதை கடத்தல் கோஷ்டிக்கிடையே நடந்த சண்டையின் காரணமாக நடந்துள்ளதாக, சினலோவா கவர்னர் மரியோ லோபஸ் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக