தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.11.11

மும்பை பத்திரிக்கையாளர் கொலை வழக்கில் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கைது.

மும்பையில் கடந்த ஜூன் மாதம் 11-ந்தேதி பட்டப்பகலில் ஜோதிர்மய் டே என்ற பத்திரிகையாளர் மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். “மிட் டே” ஆங்கிலப் பத்திரிகையில் பணியாற்றி வந்தார். பத்திரிகையில் கடத்தல் கும்பல் பற்றி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். இதனால் இந்த கொலை பின்னணியில் பிரபல தாதா சோட்டாராஜன் தொடர்பு இருக்கலாம் என்று போலீசுக்கு சந்தேகம் ஏற்பட்டது.இந்த கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி
கடந்த ஜூன் மாதம் 27-ந் தேதி ரோகே தங்கப்பன் ஜோசப், அபிஜீத் காஷாராம் ஷிண்டே, அருண் ஜனார்த்தன், சச்சின் சுரேஷ் கெய்க்வாட், அனில் பானுதாஸ், நிலேஷ் நாராயண், மங்கேஷ் தாமோதர் அகவனே ஆகிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு வினோத் அஸ்ரானி என்ற முக்கிய புள்ளி கைதானார். இவர் செம்பூரில் கட்டுமான நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் நடத்தி வருகிறார். இவர் சோட்டா ராஜனின் நெருங்கிய கூட்டாளி ஆவார்.
 
மற்றொரு கூட்டாளியான தீபக் சிசோடியா என்பவரை தேடிவருகிறார்கள். இவர் கொலையாளிகளுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்தவர். இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஜிக்னா வோரா என்ற மூத்த பெண் பத்திரிகையாளர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி டிசம்பர் 11ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.

0 கருத்துகள்: