சியோல், நவ. 26- "எங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒரு குண்டு வெடித்தால்கூட, தென் கொரியா அதிபரின் மாளிகையை, தரை மட்டமாக்கி விடுவோம்" என, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் கொரியாவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே, பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. கடந்தாண்டு நவம்பரில், யெயோன்பியோங்
என்ற தீவில், வட கொரிய கடற்படை நடத்திய தாக்குதலில், தென் கொரியா கப்பல்கள் இரண்டு மூழ்கடிக்கப்பட்டன.
என்ற தீவில், வட கொரிய கடற்படை நடத்திய தாக்குதலில், தென் கொரியா கப்பல்கள் இரண்டு மூழ்கடிக்கப்பட்டன.
தென் கொரியாவைச் சேர்ந்த இரண்டு கட்டுமானத் தொழிலாளர்கள் இறந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து, இரு தரப்புக்கும் இடையேயான உறவு, மேலும் மோசமடைந்தது. யெயோன்பியோங் தீவு, சர்ச்சைக்குரிய பகுதியில் அமைந்திருப்பதாகக் கூறி, இரு நாடுகளுமே அதற்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில், தாக்குதல் சம்பவத்தின் முதலமாண்டு நினைவு தினத்தையொட்டி, தென் கொரிய கடற்படையினர், யெயான்பியோங் தீவுப் பகுதியில், நேற்று முன்தினம் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டனர். போர்க்கப்பலில் இருந்து ஏவுகணைகள், ராக்கெட் லாஞ்சர் ஆகியவற்றை ஏவி, பயிற்சி மேற்கொண்டனர். இதற்கு, வட கொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
வட கொரியா மக்கள் ராணுவத்தின் தலைமை கமாண்டர் கூறுகையில், "எங்கள் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், தென் கொரியா ராணுவத்தினரின் ஒரு குண்டாவது வந்து விழுமானால், அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இதற்கு பதிலடியாக, தென் கொரியாவில் உள்ள அதிபர் மாளிகையை தரை மட்டமாக்குவோம். கடல் நெருப்பு என்ற பெயரில், எங்களின் தாக்குதல் மிகவும் தீவிரமாக இருக்கும்" என்றார். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த பிரச்னையால், அந்த பகுதியில், போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக