தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

26.11.11

எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி நியமனம்

எகிப்தின் புதிய பிரதமராக கமல் கன்சூரி (Kamal Ganzouri) நியமிக்கப்பட்டுள்ளார்.கெய்ரோ மற்றும் ஏனைய பிரதான நகரங்களில் இராணுவ அதிகாரங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இடைக்கால அரசு பதவியை இராஜினாமா செய்தது.இந்நிலையில் எகிப்தின் முன்னாள் பிரதமர் கமல் கன்சூரியிடமே ஆட்சிப்பொறுப்பு
கையளித்து புதிய அரசை அமைக்கும் பொறுப்பை, ஒப்படைத்துள்ளது இராணுவம்.

மேலும், அடுத்த வாரம் திட்டமிட்டபடி எகிப்தில் பாராளாமுன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது. எனினும் போராட்டக்காரர்கள் மீண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) பொதுமக்கள் அனைவரையும் கெய்ரோ சதுக்கத்தில் ஒன்று கூடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை, தொழுகை முடிவடைந்ததும், மிகப்பெரிய ஆர்ப்பாட்டபேரணி நடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சர்வாதிகார ஆட்சி நடத்திய ஹோஸ்னி முபாரக், கடந்த பெப்ரவரி மாதம் எகிப்தின் அதிபர் பதவியிலிருந்து பதவி விலக்கப்பட்டதை தொடர்ந்து, ஆட்சியை பொறுப்பேற்றுக்கொண்ட இராணுவம் சிவில் அதிகாரங்களை கட்டுப்படுத்துகிறது என கண்டித்து இப்போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையிலேயே கன்சூரி எகிப்தின் புதிய அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1996-99 காலப்பகுதியில் முபாரக்கின் ஆட்சியின் கீழ் எகிப்தின் பிரதமராக கடமையாற்றியிருந்தார்.   

0 கருத்துகள்: