தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்த 13-6-2011 அன்று கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. பிளமிங்கோ லைனர் என்ற நிறுவனம் கப்பலை இயக்கி வருகிறது. தொடக்கத்தில் இந்த கப்பலில் அதிக பயணிகள் சென்று
வந்தனர். நாளடைவில் பயணிகள் எண்ணிக்கை குறைந்தது.இந்த நிலையில் கடந்த 18ம் தேதி தூத்துக்குடியில் இருந்து கொழும்பு சென்ற பயணிகள் கப்பல் மீண்டும் தூத்துக்குடிக்கு திரும்பி வரவே இல்லை. இது குறித்து பிளமிங்கோ லைனர் கப்பல் நிறுவன அதிகாரிகளிடம கேட்டபோது அவர்கள் கூறியதாவது,
டிக்கெட் முன்பதிவுக்காக கம்யூட்டரில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேரில் பழுது ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இதனால் இந்த வாரத்தில் 2 சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வரும் திங்கட்கிழமை கொழும்பில் இருந்து கப்பல் புறப்பட்டு வரும். அதன் பிறகு வழக்கம்போல் கப்பல் போக்குவரத்து நடைபெறும் என்றனர். பயணிகள் மத்தியில் ஆர்வக் குறைவு, எதிர்பார்த்த அளவிற்கு வருவாய் இல்லாததன் காரணமாக கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக