துனிசியா முன்னாள் அதிபர் அல்-அபிடின் பென் அலிக்கும் அவரது மனைவிக்கும், ஊழல் வழக்கில் 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
துனிசியாவின் முன்னாள் அதிபர் ஷின் அல்-அபிடின் பென் அலி. இவரது ஆட்சியில் லஞ்ச ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதை தொடர்ந்து அவருக்கு
எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதையடுத்து, மனைவி லைலா டிராஸ்ல் சியா மற்றும் குடும்பத்தினருடன் பென் – அலி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். பென் – அலியை நாடு கடத்தும் படி புதிதாக பொறுப்பேற்ற துனிசிய அரசு, சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்தது.
எதிராக கடந்த ஜனவரி மாதம் மக்கள் போராட்டம் நடத்தினார்கள். இதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இதையடுத்து, மனைவி லைலா டிராஸ்ல் சியா மற்றும் குடும்பத்தினருடன் பென் – அலி சவுதி அரேபியாவில் தஞ்சம் புகுந்தார். பென் – அலியை நாடு கடத்தும் படி புதிதாக பொறுப்பேற்ற துனிசிய அரசு, சவுதி அரேபியாவிடம் கோரிக்கை விடுத்தது.
இதனிடையே, பென் – அலி வசித்துவந்த துனிசிய அதிபர் அரண்மனையில் சோதனையிடப்பட்டது. அங்கு ரூ. 125 கோடி மதிப்பிலான பணம் மற்றும் தங்க வைர நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் போதை மருந்து மற்றும் ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
முன்னதாக அவரது குடும்பத்தினர் பதுக்கி வைத்திருந்த ரூ. 235 கோடி பணத்தை சுவிட்சர்லாந்து வங்கி முடக்கியது. இதை தொடர்ந்து நாட்டின் பணத்தை ஊழல் மூலம் கொள்ளையடித்து தவறான முறையில் பயன்படுத்தியதாக அவர் மீதும், அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து அதிபர், அவரது மனைவி மீது துனிஷ் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை கடந்த 5 மாதங்களாக நடைபெற்று வந்தது. அதில் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை.
இந்நிலையில் நேற்று ஊழல் வழக்கில் நீதிபதி தவுகாமி ஹபியான் தீர்ப்பு அளித்தார். அப்போது பென் அலிக்கும், அவரது மனைவி லைலாவுக்கும் தலா 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் பென்அலிக்கு ரூ. 135 கோடி அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.
அது தவிர போராட்டத்தின் போது பொதுமக்களின் சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக 5 கோடி தினார் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் ஆயுதம் பதுக்கல் மற்றும் போதை மருந்து கடத்தல் வழக்குக்கான தீர்ப்பை வருகிற 30-ந்தேதி தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.
இதற்கிடையே தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை வழக்கறிஞர் மூலம் பென் அலி மறுத்துள்ளார். பென் அலியும், அவரது மனைவியும் துனிசியாவுக்கு திரும்பி வந்து தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக