எகிப்து முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் வயிற்றுப் புற்று நோயால் அவதிப்படுவதாக அவரது வழக்கறிஞர் பரித் எல் தீப் தெரிவித்துள்ளார்.
ஹோஸ்னி முபாரக்(83) எகிப்து அதிபராக இருக்கையில் அவருக்கு எதிராக கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் புரட்சி வெடித்தது. அவரும் தன்னாள் இயன்ற வரை மக்களை அடக்கி ஒடுக்க முயன்றார். இறுதியில் மக்கள் சக்தி வென்று அவர் அதிபர் பதவியில் இருந்து விலகினார். இந்த போராட்டதின்போது 840 பேரை ராணுவத்தினர் கொன்றனர்.
பதவியில் இருந்து விலகிய பிறகு முபாரக்,
அவரது மகன்கள் அலா, காமல் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கொலை வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவரது மகன்கள் அலா, காமல் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டு மற்றும் கொலை வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முதல்கட்ட விசாரணையின்போது முபாரக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை செங்கடல் பகுதியில் உள்ள ஷார்ம் எல் ஷேக் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரது உடல் நிலை சரியில்லாததால் சிறைக்கு அனுப்ப வேண்டாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
விசாரணையை எதிர்கொள்ள முபாரக் தயாராக இருக்கிறாரா என்று கண்டறிய அவரது உடல் நிலை குறித்த அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது. அதன்படி முபாரக்கின் வழக்கறிஞர் பரித் எல் தீப் சமர்பித்த அறிக்கையில் முபாரக் வயிற்று புற்று நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார்.
கடந்த 2010-ம் ஆண்டு அவருக்கு பித்தபை அறுவை சிகிச்சை நடந்தபோது அவரது குடலின் ஒரு பகுதி அகற்றப்பட்டது. இதையடுத்து தற்போது வயிற்றில் புற்று நோய் ஏற்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் அறிக்கை உண்மையல்ல என்று அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விசாரணையில் இருந்த முபாரக்கை தப்ப வைக்கத் தான் இந்த நோய் நாடகம் என்கின்றனர்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக