தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.11

டேனிஸ் விமானங்கள் என்ன செய்கின்றன – மர்மம்


டென்மார்க் 21.03.2011 திங்கள் மாலை
தற்போது மத்தியதரைக்கடல் பகுதியில் உள்ள ஆறு டேனிஸ் எப் – 16 விமானங்களும் நேற்று ஐந்து மணி நேரம் தாக்குதல் நடவடிக்கையில் இறங்கியதாக டேனிஸ் படைத்துறை அமைச்சர் அறிவித்திருந்தார். ஆனால் அத்தகைய தாக்குதல் எதுவும் நடைபெற்றதாக பீ.பீ.சி செய்தியில் தெரிவிக்கவில்லை. ஆனால் தமது தரப்பு
தாக்குதல்களுக்கு அமெரிக்க படைத்துறை பாராட்டு தெரிவித்ததாக அமைச்சர் கூறினார். ஆனால் எத்தகைய தாக்குதல் என்று தம்மால் திட்டவட்டமாகக் கூற முடியாது என்றும் தெரிவித்தார். அதேவேளை டேனிஸ் படைத்துறை அதிகாரிகள் தமது விமானங்கள் அங்கு எத்தகைய பணியை மேற்கொண்டுள்ளன என்ற விபரத்தை வெளியிடாமலே இரகசியம் காத்து வருவதாகவும் ஊடகங்கள் குற்றம் சுமத்த ஆரம்பித்துள்ளன. நோர்வே பிரிட்டன் போன்ற நாடுகள் தமது தாக்குதல்கள் குறித்த தகவல்களை வெளியிட டென்மார்க் மட்டும் இரகசியம் காப்பதன் மர்மம் என்னவென வினவியுள்ளனர். கடந்த ஐந்து மணி நேர தாக்குதலை டேனிஸ் விமானங்கள் திரிப்போலி மீது நடாத்தியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனினும் டென்மார்க் போருக்கு போன வேகமும், பாராளுமன்றத்தில் காட்டிய வேகமும் களத்தில் இருக்க வேண்டும் என்ற ஆவல் பல டேனிஸ்காரரிடையே எழுந்துள்ளது.

0 கருத்துகள்: