தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

22.3.11

இது பழையகால சிலுவைப் போர் போன்ற போர் ! புற்றின் ஆவேசம்


டென்மார்க் 21.03.2011 திங்கள் மாலை
ஐ.நாவில் லிபியாவுக்கு எதிராக இயற்றப்பட்ட தீர்மானம் மத்திய காலத்தில் நடைபெற்ற சிலுவைப்போர் போன்ற நிகழ்வு என்று வர்ணித்தார் ரஸ்யப்பிரதமர் விளாடிமிர் புற்றின். ஐ.நாவின் தீர்மானம் தகவல் குறைவு கொண்டது, சரியான விடயங்களை உள்ளடக்கி இயற்றப்பட்ட தீர்மானம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். கடாபியின் படைகள் ஜனநாயகத்தை பின்பற்றவில்லை என்பதற்காக விமானத் தாக்குதல்களை அமல் செய்ய முடியாது. மேலும் மற்றைய நாடுகளின் அரசியல் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலை
வைப்பது தமக்கு பலத்த கவலையை அளிப்பதாகவும் கூறினார். மேலை நாடுகள் தரைப்படையை இறக்க தயாராகி வரும் நிலையில் புற்றினின் இக்கருத்து வெளியாகியிருப்பது கவனிக்கத்தக்கது. தற்போது கடாபிக்கு எதிராக போராடும் போராளிகளின் கூட்டமைப்பின் தலைவர் அகமட் அல் காஸி மேலை நாட்டு படைகள் லிபிய தரையில் இறங்க வேண்டியதில்லை என்றும், தாமே தரைப் போரை வெல்வோம் என்றும் கடந்த 17ம் திகதி கூறினாலும் அதை மேலை நாடுகள் பெரிதாக செவிமடுக்கவில்லை. அதேவேளை இந்தப் போரின் நோக்கமென்ன ? தாக்குதல் முடிந்து கடாபியை அப்புறப்படுத்தினால் அடுத்தது என்ன ? இன்றைய பொருளாதார சிக்கலில் விலையேற்றம் மேலும் அதிகரிக்கப் போகிறது.. இப்படி ஒரு போர் தேவையா ? என்ற வழமையான வாதங்களும் எழுந்துள்ளன. இப்படி பல வாதங்கள் வந்தாலும் மேலை நாடுகளின் அவசரத்திற்குள் புதைந்திருக்கும் மர்மம் வெளிவர மேலும் சில நாட்கள் ஆகலாம்.

0 கருத்துகள்: