தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

21.3.11

அமெரிக்காவின் தாக்குதலுக்கு பதிலடிக் கொடுப்போம் – பாகிஸ்தான் பழங்குடி தலைவர்கள் சூளுரை


இஸ்லாமாபாத்:அமெரிக்காவின் ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதில் 40 அப்பாவி பழங்குடியின மக்கள் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவை பழிவாங்குவோம் என வடக்கு வஸீரிஸ்தானில் பழங்குடி தலைவர்கள் சூளுரைத்துள்ளனர்.
அமெரிக்க குடிமக்களின் மீது தாக்குதல் நடத்தவும், அந்நாட்டின் மீது புனிதப்போர்
செய்வதற்கும் இளைஞர்களை நியமிக்கப் போவதாக மூத்த பழங்குடி தலைவர் மாலிக் ஜலாலுத்தீன் பெஷாவரில் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இதர தலைவர்களுடன் ஜலாலுத்தீன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார்.
பாகிஸ்தானில் ஒவ்வொரு அமெரிக்காகாரனையும், அமெரிக்காவின் கூட்டணி நாடுகளைச் சார்ந்தவர்களையும் தாக்குவோம். நூறு ஆண்டுகள் கழிந்தாலும் எங்களுடைய பிரகடனம் அமுலிலிருக்கும்.
அமெரிக்கா தனது சாகசத்தை பழங்குடிப் பகுதியில் நிகழ்த்துவதை முடிவுக்குக் கொண்டுவருவோம். தாலிபான்களை தாக்குவதாகக் கூறி அப்பாவிகளான பெண்களையும், குழந்தைகளையும் அமெரிக்கா கொன்றொழிப்பதாக  என ஜலாலுத்தீன் தெரிவித்தார்.
தத்தாகேலில் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க ராணுவம் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தை கடுமையாக கண்டித்த பாகிஸ்தான் தலைவர்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான்-அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கியுள்ளனர்.
இதற்கிடையே, வடக்கு வஸீரிஸ்தானில் பாகிஸ்தான் விமானப்படை ரோந்தை வலுப்படுத்தியுள்ளது. முக்கியமான பகுதிகளில் கூடுதலான ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் தாக்குதல் நடந்தால் உடனடியாக பதிலடி கொடுக்க இந்த நடவடிக்கை என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

0 கருத்துகள்: