டென்மார்க் 20.03.2011 ஞாயிறு மதியம்
நேற்றிரவுவரை கடும் தாக்குதல்களை மேற்கொண்ட மேலை நாட்டுப் படைகள் சில மணி நேர இடைவெளிக்குப் பின்னர் இன்று மீண்டும் அடுத்த கட்டத் தாக்குதல்களை பல்வேறு புதிய இலக்குகளையும் நோக்கி விரிவாக்கம் செய்தன. கடாபியின் விமானப் படை இலக்குகளை அடியோடு சேதம் செய்யும் முயற்சியில் அமெரிக்க விமானங்கள் இறங்கியுள்ளன. அமெரிக்க விமானங்கள்
தொடர்ந்தேர்ச்சியாக தோமஸ்க்வாக் ஏவுகணைகளை ஏவியபடியே இருக்கின்றன. லிபிய படைகளின் பெருந்தொகையான கவச வாகனங்கள் அடியோடு நாசம் செய்யப்பட்டுவிட்டதாக பெங்காஸியில் இருந்து போராளிகள் தகவல் தருகிறார்கள். அதேவேளை கடாபியின் மாளிகை மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடாபியின் ஆட்சியில் தாம் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. பாடசாலை போக முடியவில்லை, கார் கிடையாது, இன்று தெருவால் தனிமையில் போகவே முடியவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். அதேவேளை கடாபிக்கு எதிராக உலக நாடுகள் ஒன்று திரண்டு தாக்குவதால் அவருக்கு ஆதரவாக மெல்லிய அனுதாப அலையும் வீச ஆரம்பித்திருப்பதை மேலை நாடுகளின் செய்திகள் மறுக்கவில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக