கேணல் கடாபியின் பல மகன்களில் ஒருவரான காமீஸ் கடாபி என்பவர் போரில் மரணமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. திரிப்போலி
வைத்தியசாலையில் பலத்த காவல்களுக்கு மத்தியில் இவருடைய சிகிச்சைகள் நடைபெற்றதாகவும், கடந்த வாரமே இவர் மரணித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் மேலைத்தேய ஊடகங்கள் எவையும் இவர் மரணமடைந்த செய்தி குறித்து இதுவரை ஊர்ஜிதம் செய்யவில்லை. போராளிகளின் விமானி ஒருவரே கடாபியின் பப் அல் அஸீசியா விமான கட்டுப்பாட்டு நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தியதாகக் கூறப்படுகிறது. கடாபியின் மகன் காமீஸ் கடாபி தலைமையிலான இராணுவ அணி லிபியாவில் மோசமான நயவஞ்சக தாக்குதல்களை செய்த அணியாகும். காமீஸ் படை அணி என்பது லிபியாவில் உள்ள மக்களை குலை நடுங்க வைத்த அணியாக இயங்கி வந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக