தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.11

இனவெறி பேச்சு: ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது கான்பெரா, மார்ச். 26-


கான்பெரா,  ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றி அவதூறு கருத்துகளை கூறியதற்கு ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு எதிரான அமெரிக்க கூட்டுப் படையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 1500 வீரர்கள் உள்ளனர். ஆப்கானிஸ்தானின் தெற்கு பகுதியில் உள்ள திரின் கோட்டில் முகாமிட்டிருக்கின்றனர். அவர்களில் சிலர், `பேஸ்புக்' இணைய தளத்தில் ஆப்கானிஸ்தான் மக்களைப் பற்றி இனவெறி அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆப்கானிஸ்தான் அரசிடம் ஆஸ்திரேலியா மன்னிப்பு கேட்டது. இது தொடர்பாக, ஆப்கானிஸ்தான் ராணுவ மந்திரி அப்துல்
ரகிமை ஆஸ்திரேலிய ராணுவ மந்திரி ஸ்டீபன் ஸ்மித் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தார். ஆஸ்திரேலிய வீரர்களின் கருத்துகளால் அந்த நாட்டின் மரியாதைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்டும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்.

0 கருத்துகள்: