தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

29.3.11

குவைத் இடையீட்டை ஏற்றுக்கொள்வோம்: பஹ்ரைனின் முக்கிய எதிர்கட்சி அறிவிப்பு


மனாமா:பஹ்ரைனில் எதிர்கட்சியான ஷியா பிரிவினருக்கும், அரசுக்குமிடையே பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்படலாம் என குவைத் நாட்டின் அறிவிப்பை ஏற்றுக்கொள்வதாக முக்கிய எதிர்கட்சியான விஃபாக் அறிவித்துள்ளது.
பஹ்ரைனில் நிலவும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவர தங்களுடைய கட்சி இதனை ஏற்றுக்கொள்ளும் என அக்கட்சியின் தலைவர் ஜாஸிம் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
பஹ்ரைன் அரசு மற்றும் எதிர்கட்சியின் பேச்சுவார்த்தைகளில்
இடையீட்டாளராக செயல்படலாம் என நேற்று முன்தினம் குவைத் அமீர் ஷேக் ஸபாஹ் அல் அஹ்மத் அல் ஸபாஹ் அறிவித்திருந்தார்.
மத்தியஸ்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பதற்கு விஃபாக் கட்சிக்கு தனிப்பட்ட நிபந்தனைகள் ஒன்றுமில்லை. ஆனால், நாட்டில் வெளிநாட்டு ராணுவத்தின் இருப்பு பேச்சுவார்த்தையில் முக்கிய விஷயமாகும் என விஃபாக் கட்சியின் தலைவர் ஹுஸைன் தெரிவித்துள்ளார்.
ஆனால், பஹ்ரைனில் வெளிநாட்டு ராணுவத்தினரை வாபஸ் பெறும் வரையிலோ, சிறைக்கைதிகளை விடுதலைச் செய்யும் வரையிலோ எந்த வித இடையீட்டு பேச்சுவார்த்தைக்கும் தயாரில்லை என இதர ஷியா பிரிவினர் கடந்த வாரம் தெரிவித்திருந்தனர்.

0 கருத்துகள்: