ஷார்ஜா:எட்டு இந்தியர்களுக்கான மரணத் தண்டனையை யு.ஏ.இயின் ஷார்ஜா மாநில நீதிமன்றம் ரத்துச் செய்தது. இவர்களின் தாக்குதலில் கொல்லப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவரின் குடும்பத்திற்கு துபாயில் இந்திய ஹோட்டல் அதிபர் ஒருவர் ஈட்டுத்தொகை அளித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கையை நீதிமன்றம் மேற்கொண்டது.
எஸ்.பி.சிங் ஓபராய் என்பவர் கொலை வழக்கில் மரணத்தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள்
உள்பட 10 பேரை விடுதலைச் செய்ய ஈட்டுத் தொகையை வழங்கியுள்ளார்.கடந்த 2009-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி பாகிஸ்தான் ஃபைஸாபாத்தைச் சார்ந்த மும்தாஸ் யூசுஃபின் கொலைத் தொடர்பாக 10 பேரை ஷார்ஜா போலீஸார் கைது செய்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 8 இந்தியர்களும் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தவர்களாவர். ஈட்டுத்தொகை வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மரணத் தண்டனையை ரத்துச்செய்த நீதிமன்றம் 10 பேருக்கும் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததாக ஓபராய் தெரிவித்துள்ளார். ஆனால், 21 மாதங்களாக சிறையிலடைக்கப்பட்டுள்ள இவர்கள் 3ஆண்டுகாலம் முடிந்தவுடன் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் என ஓபாராய் தெரிவித்தார்.
நன்றி: தூது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக