அமெரிக்காவில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று, 20 குழந்தைகள் உள்பட 27 பேர் சாண்டிகுக் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு நிகழ்ச்சியில் பலியான அதிர்ச்சியால் அமெரிக்க மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை திடீரென மாற்றிக்கொள்ள தீர்மானித்துள்ளனர். அமெரிக்காவின் மிகவும் வன்முறை பிரதேசமாக கருதப்படும், Camden, New Jersey, போன்ற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களுடைய துப்பாக்கிகளை காவல்துறையினரிடம் திரும்ப ஒப்படைத்தனர்.அமெரிக்காவின்
Camden, New Jersey, போன்ற நகரங்களில் வாழ்வோர், தங்களுடைய துப்பாக்கிகளை திரும்ப ஒப்படைக்க நினைப்பவர்கள், உடனே தங்களுக்கு அருகிலுள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்ற அற்விப்பு நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட ஒரு மணி நேரத்தில், ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய துப்பாக்கியை திரும்ப
கொண்டு வந்து ஒப்படைத்தனர். அவைகளில் 90 சதவிகிதம் நன்றாக இயங்கும் நிலையில் இருந்தது. சாண்டிகுக் பள்ளி நிகழ்ச்சி போல் இனியொரு சம்பவம் தங்கள் குடும்பத்திலுள்ள உறுப்பினர்களால் நடந்துவிடக்கூடாது என்ற அச்சத்தால், துப்பாக்கிகளை ஒப்படைப்பதாக பெரும்பாலும் கூறினர்
துப்பாக்கிகளை ஒப்படைக்கும் பொதுமக்களிடம் காவல்துறையினர் எவ்வித கேள்வியும் கேட்காமல், திரும்ப வாங்கிக்கொண்டனர். எனவே பொதுமக்கள் நிம்மதியுடன் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். அதுமட்டுமல்லாது இவ்வாறு துப்பாக்கிகளை ஒப்படைத்த பொதுமக்களுக்கு அரசு சார்பில், பணமும் கொடுக்கப்பட்டது. $50 முதல் $250 வரை அவரவர் கொண்டுவரும் துப்பாக்கியின் தரத்திற்கேற்ப பணம் கொடுக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியால், இனி அமெரிக்காவில் அமைதி திரும்பும் என பெரும்பாலனோர் எதிர்பார்க்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக