சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் விசேட பொருளாதார தொடர்பேதும் கிடையாது. அசாத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தமக்கில்லை என ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன் தெரிவித்துள்ளா ர்.சிரியா தனது எதிரணியினரைத் தடுத்து நிறுத்தி வ ன்முறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு மு யற்சிக்காமல் தனது இலக்குகளை மாற்றி மாற்றிக் கூறி வருவதாகவும் முடிவில்லாமல் சன்டையிட்டு வருவதாகவும் புடீன் குற்றம்
சாட்டியுள்ளார்.ரஷ்யாவில் இடம்பெற்ற வருடா ந்த செய்தியாளர் மாநாட்டின் போதே புடின் இக்கருத்துக்களைக் கூறியுள்ளார். 'நாம் சிரியாவில் அதிபர் அசாத் ஆட்சியின் அபாய நிலையைப் பொருட்படுத் தவில்லை. அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதை நாம் தெளிவாக அறிவோம். அடுத்து இடம்பெறப் போவது என்ன என்பது குறித்தே தாம் அதிக கவலையடைந்துள்ளோம். எமக்கும் சிரியாவுக்கும் விசேட பொருளாதாரத் தொடர்பு என்று ஒன்று இதுவரையும் கிடையாது. மேலும் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் தனது ஆட்சிக்காலத்தில் ஒரு தடவை கூட ரஷ்யாவுக்கு விஜயம் செய்ததில்லை. சுமார் 40 வருட கால குடும்ப அரசியலில் ஈடுபட்டு வரும் அசாத் யுத்தத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமானால் எதிரணியினருடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதே, சிரியாவின் தலைவிதியைத் இரத்தம் சிந்தாமல் தீர்மானிக்கும் விடயமாக இருக்கும்' என்று அவர் மேலும் கூறினார்.சிரிய அதிபர் அசாத்தை பதவிநீக்கம் செய்ய மேற்குலக நாடுகள் ஐ.நாவில் கொண்டுவந்த தீர்மானம், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் வீற்றோ அதிகாரம் மூலம் இரு தடவை முறியடிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை சமீபத்தில் சிரிய யுத்தம் காரணமாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இடம்பெயர்ந்த அகதிகளுக்கென ஐ.நா $1.5 பில்லியன் டாலர்கள் உதவி வழங்க முன் வந்துள்ளது. எனினும் சுமார் 525 000 சிரிய மக்கள் அயல் நாடுகளில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளதால், இவர்களுக்கு நிதியுதவி போதுமானதாக இல்லை எனவும், இவர்களுக்கு உதவி செய்ய மேலும் $520 மில்லியன் டாலர்கள் தேவைப்படுவதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக