தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.12

ரஸ்யாவின் யுத்தக் கப்பல்கள் சிரியா நோக்கி


சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போர் ஏறத்தா ழ இறுதிக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது.இதற்கு ந ல்லதோர் அடையாளமாக இன்று ரஸ்யாவின் ஐந்து யுத்தக் கப்பல்கள் சிரியா நோக்கி விரைந்துள்ள செய் தி அமைந்துள்ளது.விரையும் ஐந்து கப்பல்களில் ஒ ரு போர்க்கப்பல், ஒரு டாங்கரும் அடங்கும், இவை அனைத்தும் ரஸ்ய மக்களை பாதுகாப்பாக மீட்டுவர புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவா க லிபியாவில் கடாபி,
ஈராக்கில் சதாம் உசேன் போ ன்றவர்களை கடைசிவரை ஆதரித்த ரஸ்யா அவர்கள் வீழ்ச்சியடையும் நேரம் வந்ததும் போர்க்கப்பல்களை அனுப்பி தனது நாட்டவர்களை மீட்பது வழமை யாகும்.
எரிகிற வீட்டில் பிடுங்கினது இலாபம் என்பது போல இந்த நிகழ்வுகள் கடைசிக்கட்டத்தில் நடந்தேறும்.
ரஸ்ய போர்க்கப்பல்கள் போனால் கதை கந்தலாகிவிட்டது என்பது பழைய வரலாறாக இருப்பதால் சிரியாவின் கள நிலமையும் ஆட்டம் கண்டுவிட்டதை உணர முடிகிறது.
தற்போது சிரிய தலைநகர் டமாஸ்கசிற்கு அருகாமையில் உள்ள பாலஸ்தீன அகதி முகாமிற்குள் சிரிய அதிபரின் டாங்கிகள் நுழைந்துள்ளன.
அங்கிருந்து சிதறி ஓடிய அகதிகள் மரத்தடிகளிலும், வீதிகளிலும் தங்கியுள்ளார்கள்.
மேலும் அமெரிக்காவில் இருந்து ஆறு பற்றியாற்றிக் ஏவுகணைகளும் 400 அமெரிக்கப் படைகளும் சிரிய – துருக்கி எல்லை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
கடைசி நேரத்தில் நிலைதடுமாறி சிரியா துருக்கி மீது ஆகாயத் தாக்குதல்களை நடாத்தினால் அதை முறியடிக்க இந்த ஏவுகணை அழிப்பு கருவிகள் நகர்த்துப்படுகின்றன.
தற்போது டமாஸ்கஸ்சை போராளிகள் சுற்றி வளைத்துவிட்டதால் ஆஸாட் கடற்கரையோரமாக உள்ள தனது பிறந்த நகரத்திற்கு படைகளை நகர்த்தி சதாம் உசேன் தெற்கு நோக்கி தனது சொந்த ஊருக்கு போனது போன்ற பீ பிளான் என்னும் திட்டத்தை கையில் எடுத்து மேலும் பல மாதங்கள் தாக்குப் பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது இவ்விதமிருக்க இன்று வெளியான ஊடகவியலாளர் கொலைகளை மதிப்பீடு செய்யும் சி.பி.யு ஆய்வின் பிரகாரம் இந்த ஆண்டு உலகம் முழுவதும் மொத்தம் 67 ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில் 28 பேர் சிரியாவில் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறுகிறது, இந்த ஆண்டு ஊடகவியலாளர் படுகொலைகள் மோசமாக நடைபெற்ற ஆண்டாக இருக்கிறது.

0 கருத்துகள்: