தண்ணீர் குன்னம் இணையதளத்திற்க்கு வருகைபுரிந்திருக்கும் உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

20.12.12

ஹிளாரி கிளின்டன் மீது கடும் விமர்சனம்


அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹி ளாரி கிளின்டன் தனது பதவியில் சிறப்பாகச் செயற் படவில்லையென்று இன்று வெளியான ஏ.ஆர்.பி அ றிக்கை தெரிவித்துள்ளது.கடந்த செப்டெம்பர் 11ம் தி கதி லிபியாவின் பெங்காஸி நகரத்தில் அமெரிக்க கா ன்ஸ்லேட் தர தூதுவரும் அவருடன் கொல்லப்பட்ட மூவர் தொடர்பாகவும் ஏ.ஆர்.பி அமைப்பு நுட்பமான ஆய்வொன்றை நடாத்தியுள்ளது.ஆய்வின் முடிவாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் பொறுப்பற் ற செயலே இந்த படுகொ
லைகளுக்குக் காரணமாகும் என்றும் தெரிவித்துள்ள து.
இன்னசன்ஸ் ஆஃப் முஸ்லீம் என்ற முகமதுவை நபி அவர்களை கேலி செய்யும் திரைப்படத்திற்கு எதிராக நடந்த ஆர்பாட்டத்திலேயே இவர் கொல்லப்பட்டதாக முதலில் செய்தி வெளியானது தெரிந்ததே.
படுகொலை நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பதாக தூதரகத்தின் முன்னால் ஆர்பாட்டக்காரர் எவரும் இருக்கவில்லை, ஆகவே தூதுவர் பயணிக்கும் நேரம், அது குறித்த எச்சரிக்கை எதையுமே வழங்காத நிலையில் அவர் அநியாயமாக அல் காய்தா போராளிகளிடம் சிக்குப்பட்டு மரணித்துள்ளதாக அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
மேலும் இந்த அறிக்கை வெளியாவதற்கு முன்னர் தற்போதய வெளியுறவுத்துறை அமைச்சரின் பார்வைக்கு சென்றிருக்கும் என்பதும் தெரிந்ததே.
நேற்று முன்தினம் ஹிளாரி கிளின்டன் மயக்கமடைந்து விழுந்ததும், அவருக்கு வயிற்றில் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படடதையும் இணைத்து நோக்கினால் இதன் பாரதூரத்தை எளிதாகப் புரியலாம்.
அடுத்த அதிபர் தேர்தலில் டெமக்கிரட் கட்சி சார்பில் போட்டியிட புறப்பட்டுள்ள கிளரிக்கு விழுந்துள்ள பாரிய அடியாக இந்த அறிக்கை.
மேலும் அவருடைய ஆளுமைக்குறைவுக்கு இதுவே தகுந்த சான்று என்று எதிரிகள் கூறப்போகிறார்கள்.
வெளிநாட்டு அமைச்சு பதவியில் இருந்து ஹிளாரி மிகவும் களைப்படைந்துவிட்டார் என்று அவருடைய கணவனும் முன்னாள் அதிபருமான பில் கிளின்டன் கூறிய இமாலயத் தவறையும் அவர்கள் இத்துடன் சேர்க்க மறக்கமாட்டார்கள்.
வெறும் நாலே நாலு ஆண்டுகள் வெளிநாட்டு அமைச்சர் பதவியை களைப்பின்றி வகிக்க முடியாத ஒருவர், தனது பதவிக்காலத்தில் ஓர் அமெரிக்கத் தூதுவருடைய உயிரைப் பாதுகாக்கும் இறுக்கமான ஒழுங்குகளை முன்னெடுக்க முடியாத ஒருவர் எப்படி அடுத்த நான்கு வருடங்களுக்கு பின் வரப்போகும் அதிபர் தேர்தலில் பங்கேற்க முடியும், பங்கேற்றாலும் உரிய பயன் தருமா..?
ஏற்கெனவே வயதான பெண்மணி என்று வர்ணிக்கப்பட்ட இவர் மேலும் 12 வருடங்கள் அரசியல் அரங்கில் களைப்பின்றி தாக்குப் பிடிப்பாரா..? என்று சாதாரண அமெரிக்க வாக்காளன் சிந்திக்க வாய்ப்புண்டு.
தனது மனைவியின் அரசியல் எதிர்காலம் தொடர்பாக பில் கிளின்டன் வகுத்துள்ள வியூகம் போதியதாக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
அதேவேளை அமெரிக்காவில் உளவியல் கொலையாளியின் படுகொலைகள் நடைபெற்ற நியூரவுண் நான்கு தினங்களுக்குப் பின்னர் நேற்று மறுபடியும் இயல்பு நிலைக்கு திரும்பியது, அனர்த்தம் நடைபெற்ற சான்டி பாடசாலை தவிர மற்றைய பாடசாலைகள் நேற்று திறக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்: