கடந்த மாதம் மிகவும் மோசமான உடல்நிலை கார ணமாக சிவசேனா கட்சித்
சிவசேனா கட்சியின் தலைமையகம் அந்த பார்க் அருகில் இருந்ததாலும் சில காலங்களாகவே, சிவாஜி பார்க்கில் நடை பெற்றுவந்த பொதுக்கூட்டங்களில் மட்டுமே பால் தாக்கரே கலந்து கொண்டு உரையாற்றியதாலும், மகாரஷ்டிர அரசு பால்தாக்கரே உடலை சிவாஜிபார்க்கில் தகனம் செய்துகொள்ள சம்மதம் அளித்து இருந்தது.
எனினும் அந்த இடத்திலேயே பால்தாக்கரேயின் நினைவிடம் அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிவசேனைத் தொண்டர்கள், இடத்தை காலி செய்ய மறுத்து தற்காலிக நினைவிடமாக வழிபாட்டு வந்தனர்.
மும்பை நகராட்சி, மகாராஷ்டிர முதல்வர் பிருதிவிராஜ் சவான் ஆகியோர் வலியுறுத்தியும் தொண்டர்கள் கேட்க மறுத்திருந்தனர். இந்நிலையில் மும்பை மாநகராட்சி அந்த இடத்தை அதிரடியாக காலிசெய்து கையகப் படுத்திக் கொள்ளும் என்றும் கூறியிருந்தது. இதை அடுத்து கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் தொண்டர்கள் மிக அமைதியாக தங்கள் கைகளாலேயே தற்காலிக நினைவிடத்தை அகற்றியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக