இன்று வெள்ளிக்கிழமை டிச. 21 ஆம் திகதி உலக அ ழிவு ஏற்படுமோ என உலகின் பல மக்கள் ஐயப்படுகி ன்றமை அவசியமற்றதொன்றாகும் என இப்புதிய த கவல் கூறுகிறது.1996 ஆம் ஆண்டு, 2000 ஆம் ஆண் டு மற்றும் மற்றும் அண்மையில் 12/12/2012 ஆகிய தி னங்களில் உலக அழிவு நிகழும் என்று கூறிய தீர்க்க தரிசனங்கள் யாவும் பொய்த்துப் போனது உலகம் அ றிந்த விடயம். இதைப்
போன்று இன்றும் (டிச.21) உல கம் அழியும் என ஒரு போலியான மயக்கத்தில் மக்கள் உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
போன்று இன்றும் (டிச.21) உல கம் அழியும் என ஒரு போலியான மயக்கத்தில் மக்கள் உள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
மாயன் பூர்வ குடிகளின் வழி வந்த எஞ்சியிருக்கும் மக்கள் சுமார் 700 பேர் வரை மெக்ஸிக்கோவின் யக்சுனா கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் வாழும் இடத்திலே தான் கி.மு 2000 அளவில் பண்டைய மாயன் மக்கள் கோலோச்சியிருந்தனர். இக்கிராமத்தில் வசிக்கும் தச்சரான சான்டோஸ் எஸ்டெபன் எனும் நபர் ஒருவர் கருத்துரைக்கையில், 'சுமார் 5126 ஆண்டுகள் பழைமையான மாயன் கலெண்டர் நாளையுடன் முடிவடைந்து ஒரு புதிய யுகம் ஆரம்பிக்கப் போவதை ஆவலுடன் தான் எதிர்பார்த்திருப்பதாகவும் இது குறித்து நம் மக்கள் பயப்பட வேண்டிய அவசியம் எதுவும் இல்லை ஏனெனில் நாளை புது யுகம் பிறக்கும் போது உலகம் அழிந்து தான் உருவாகும் என்பதர்கு எந்தத் தடயமும் இல்லை. மேலும் இப்படியான ஒரு பயத்தை நமது முன்னோர்கள் நமக்கு விதைத்துச் செல்லவில்லை' என்றார்.
இதேவேளை 21 ஆம் திகதி உலக அழிவு குறித்து பொய்யான வதந்திகள் உலகம் முழுதும் பரவியிருப்பதால் பாதிப்புற்ற மக்கள் இது பற்றிய விளக்கத்தை அறிவதற்காக அதி கூடிய தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல் வாயிலாக அணுகியிருக்கும் நிறுவனம் நாசா ஆகும். மேலும் நாசா இவர்களுக்கு உலகம் நாளை அழிவதற்கு உறுதியான காரணம் எதுவும் கிடையாது என நம்பிக்கை ஊட்டி வருகின்றது.
இதேவேளை சீனாவில் உலக அழிவு குறித்த பொய்யான வதந்தி பரப்பிய குற்றத்துக்காக அல்மைட்டி கோட் எனும் கிறிஸ்தவ மத அமைப்பைச் சேர்ந்த 1000 உறுப்பினர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப் பட்டவர்கள், இன்னமும் டிசம்பர் 21 தொடங்கி இன்னமும் 3 நாட்களுக்குச் சூரியன் வானில் தென்படாது. எனவே கம்யூனிசத்தைக் கைவிட்டு விட்டு எங்களுடன் வந்து இணைந்து விடுங்கள் எனப் பிரச்சாரம் செய்துள்ளனர்.
வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள். அதாவது இச்செய்தியை நீங்கள் வெள்ளிக்கிழமை வாசித்தால் மிக விரைவாக வாசித்து விடுங்கள். இதுவே நீங்கள் இச்செய்தியை சனிக்கிழமை வாசித்தால் சற்று ஆறுதலாக மூச்சு விட்டு வாசித்தவாறே மாயன்களின் 14 ஆவது சுழற்சியின் புதிய யுகத்தை அவர்களுடன் இணைந்து கொண்டாடுங்கள்.
நன்றி:4தமிழ்மீடியா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக